29 June 2006

"கதைச்சது" வெளிவந்தது!!

நிலாராஜ் தனது பதிவில் சொன்னது போல், போட்டி என்றால், எங்கிருந்தோ நேரம் கிடைத்துவிடுகிறது.

அவசரப் பிரசவமானாலும், சுகப்ரசவமே! நிலாச்சாரல் ஆண்டு நிறைவுப் போட்டிக்கான கடைசி நாள், கடைசி நொடித்துளிகள் இருந்தபோது, இந்திய நேரப்படி, மிகக் கடைசியாக சமர்ப்பித்த சோம்பேறிப் போட்டியாளன் நானொருவனாகத்தான் இருக்கமுடியும்!! நிலா பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெற்றாலும், அவரது இணைய பத்திரிகையில் எனது கதையும் கவிதையும் வெளியிடப்படுவதில் எனக்கு பரிசு கிடைத்த மகிழ்ச்சி!! அனுராதா ரமணனும், கபிலன் வைரமுத்துவும் எழுதிய வரிசையில், இந்த சின்னபையலின் கிறுக்கலும் உட்புகுந்தது அதிசயமே!! அவற்றின் சுட்டி இதோ:-

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_265a.asp
http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_264a.asp


போட்டி என்றதும், நினைவுக்கு வருகிறது ஒரு முடிவே தெரியாத போட்டி! துவக்கு.காம் "புலம் பெயர்ந்தவர்"களைக் கருவாகக் கொண்டு கவிதை எழுத ஒரு போட்டி அறிவித்து நிறைய பேர் எழுதி அனுப்பினார்கள். இன்றுவரை என்ன ஆயிற்று தெரியவில்லை; யாரேனும் கண்டுபிடித்துத் தருவார்களா?

2 comments:

துளசி கோபால் said...

எங்கே ஆளையே காணொம்?

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்........????

படிச்சுட்டு சொல்றேன்.

Maraboor J Chandrasekaran said...

டீச்சரக்கா, சந்தோஷம், நினைவு வெச்சுருக்கேங்களே? எவன் கண்ணு பட்டதோ, கம்பனில வேல பெண்டு நிமிறுது! நிலா அக்கா பதிச்சாங்க, நீங்க படிக்காமலே, சிங்கம்னு முகமன் சொல்றீங்க, அதே இன்னொரு பரிசு கிடைச்ச மாதிரிதான்! படிச்சு, நிறை குறைகளை சொல்லுங்க, நன்றி.