அத்தனையும் 'விடுதலை'க் கற்றால்தான் நிஜ விடுதலை!
வருகைதரும் நேரம் உயிர்மூச்சு பெற்றுவிடுதலை
வளருகின்ற தூரம் வாழ்வைக் வாழக் கண்டுவிடுதலை
காணும் வாழ்வில் கல்வி காதல் கடமை கற்றுவிடுதலை
கண்டபின்னர் வந்த தூரம் திரும்பிப் பார்த்துவிடுதலை
காணும் பொருள் யாவற்றையும் உடன் பெற்றுவிடுதலை
பெற்றபின்னர் அத்தனையும் இயைந்து றந்துவிடுதலை
துறக்கும் நிலை போகும் மனம் முற்றும் துள்ளிவிடுதலை
கண்டிடும் நாள்தான் எமக்கு முற்றிலுமாய் விடுதலை!
2 comments:
நல்ல முயற்ச்சி.
அடுத்த முறை எழுதிய கவிதயை நீங்களே எற்ற இறக்கத்துடன் படித்து ஒலிப் பதிவையும் வழங்கினால், கேட்க்க சுலபமாகவும் இனிமையாகவும் இருக்கும்.
வருகைக்கு நன்றி.அது என்ன பேட் ந்யூஸ் இந்தியா? இந்தியா என்றாலே குட் ந்யூஸ் எனும் கட்சியைச் சார்ந்தவன் நான். ஒலிப் பதுவு, பாடுவது அதை வலையில் உலவவிடுவது- இதில் ஏதும் நான் தேர்ச்சி பெறாதவன். யாரேனும் செய்வித்தால், சுட்டியை என் பதிவில் வெளியிடுகிறேன்.நன்றி.
Post a Comment