http://www.youtube.com/watch?v=7ReF2sHuvRw
திரைப்படம் எடுத்தலில் என்னுடைய கன்னி முயற்சி. தலைப்பு - மரபு சார் இந்தியா (Generic India)
கொடுத்த நேரம்: 1 நிமிடம். கோவிலுக்கு வரும் பெண் குழந்தை தானாக, நாட்டிய சிற்பங்களைக் கண்டு, ஆட முயல்கிறாள். அதிசயங்கள் நிறைந்த நம் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறு முயற்சி. பரதநாட்டியம், நமது பெண்கள் தானாக கற்றுக் கொள்தல், கோவில் (கதை தளம்) மற்றும் சிற்பங்கள் என இந்த படப்பிடிப்பில் யாவும் பாரம்பரியமிக்கவையே!
22 comments:
நல்ல முயற்சி சந்திரசேகரன்.
படத்தின் கருத்தாழத்தை விட குழந்தையின் நடத்தையே முழுதும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.
பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நான் கூட சிறுவயதில் இக்குழந்தை மாதிரி சிற்பம் பார்த்து போஸ் கொடுத்திருக்கிறேன். யதார்த்தமா இருந்தது.
நல்லா வந்திருக்கு, கடைசியிலும் அந்தப் பெண்ணின் சத்தம் வராதிருந்திருக்கலாம் என தோன்றியது.
Very well done Sir!
சிறுமியின் அபிநயமும், நடிப்பும் சற்று amateurishஆக இருப்பது தான் நெருடல்.
ம்யூசிக் நல்லா இருந்தது, எடிட்டிங், கேமரா, லைட்டிங், எல்லாமே சூப்பர்.
http://stage6.divx.com/
இந்த சுட்டி உங்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும்.
உதாரணம்:http://stage6.divx.com/user/kanchifilms/video/1178312/NAKI-HD-TEST
அன்புடன்
காஞ்சி பிலிம்ஸ்
நன்றாக வந்திருக்கிறது.
மிக நன்று!
விபரக் கொத்து வாசிக்கமுடியாத அளவு வேகமாகச் சென்று விட்டது.
நன்றி, மாசிலா! குழந்தை கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம்; ஒரு மணி நேரத்தில் சொல்லிக்கொடுத்து மதிய வெயில் ஏறும் வரை பொறுமையாக நடனம் ஆடி (நடனமும் கற்றதில்லை, அதுவும் முதல் முயற்சிதான், குழந்தைக்கு) அந்த குழந்தையின் ஒத்துழைப்பு இல்லாமல் இது எடுத்திருக்க முடியாது!
காட்டாறு, பேரே பரபரப்பா இருக்கே! எங்க அந்த போட்டோவை வெளியிடுங்க, நல்லாயிருக்கும்!
========================
வாங்க இ.கொ! பெண்ணு கத்தவே இல்ல! பேக்ரொவுண்ட் ரிகார்டிஸ்ட் பண்ண வேலை அது! கண்டுபிடிச்சிட்டீங்களே, கில்லாடிய்யா நீர்!
சர்வேசன், எல்லாருமே அமெச்சூர்தான். பெண்ணு கூட முதல் அடெம்ட்! உச்சி வெயில் ஏறுற வரை ஆடி படம் எடுக்கணும்னா? சரி, அடுத்த ஐடியால்லாம் எடுக்கறப்ப, ரொம்ப ப்ரொபஷனலா எடுத்தாப் போச்சு!
==============================
நன்றி, ஜெய் !
================================
காஞ்சி பிலிம்ஸ் எனும் ஆனானி, சுட்டி, சுட்டிக்காட்டியதற்கு நன்றி!
=================================
நன்றி, முத்துலெஷ்மி!
=======================
வாங்க பாரீஸ் ஜோகன்! போட்டியில் ஒரு நிமிடம்தான் டைம்! அதனால்தான் விபரக்கொத்தை விரட்ட வேண்டியதாகிவிட்டது! நல்ல கம்பெனிகளுக்கு காட்ட, நேரம் நீட்டிக்கப் பட்ட ரீல் என்னிடம் உள்ளது!
நல்லா வந்திருக்கு சந்திரசேகரன். நல்ல முயற்சி, கன்னி முயற்சியே அசத்தலா இருக்கு! கலக்குங்க!
வாழ்த்துக்கள்!!
சந்த்திரசேகர்,
இந்த தலைப்புக்கு இந்த கற்பனையை நீங்கள் செய்தது அற்புதம். படம் காட்டும் முயற்சி சிறப்பாக இருக்கிறது. இந்தத் துறையில் நீங்கள் கலக்கப்போவதின் முன்னோடியாக இதை எடுத்துக்கொள்ளலாமா?
நன்றி, ஜெயசங்கர்!(We the people)
===============================
ஓகை- விதி யாரை விட்டது. இப்ப வேற பொழப்பு, படம் எடுப்பேனா, பெரியாளு ஆவேனா தெரியாது; "செய்வன திருந்தச் செய்" - அதான் நம்ம பாலிசி
(உங்க புத்தக வெளியீடு எப்ப?)
நல்லாவே வந்திருக்கு! வாழ்த்துக்கள்! கதாநாயகியும் ரொம்ப இயல்பா நடிச்சிருக்காங்க :-)
சேதுக்கரசி, நன்றி. "கதாநாயகி" அந்தஸ்து தந்த பெண் ஸ்பாட்ல கிடைச்ச லக்கி ப்ரைஸ்!
உங்க நட்சத்திர வாரத்திலே வந்ததுக்குப் பின் இன்னிக்குத் தான் வரேன், இந்தப் பக்கம நல்லா இருக்கு பதிவுகள் எல்லாம். வந்ததுக்கும் வாழ்த்துச் சொன்னதுக்கும் நன்றிகள்.
ரொம்ப நல்லா இருக்கு..
எந்த vedio/audio editing tool use பண்ணிநீங்க ன்னு சொல்லுவீங்களா... ஹீ..ஹீ..நிறைய home vedios edit செய்யப்படாமல் இருக்கு... அதான்
இன்றைக்குத்தான் இதைப் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் ஃபிலிம் மேக்கிங் எங்காவது படித்தீர்களா?
வாங்க தீபா! எடிட்டிங் டூல்ஸ் எதுன்னு தெரியல. ஆனா டைடில்ல (மைக்ரோ நொடிகளில்) காட்டப்படும் எடிட்டிங் கலைஞர்கள், கோடம்பாக்கத்துச் சந்து பொந்துகளில், சினிமா ஆசையோடு அரை வயிற்றில் உண்டு, ஊருக்கு இன்னமும் இந்திய தபால் துறையை நம்பி கடிதம் எழுதும் பல கலைஞருள் இருவர். முதல் முறையாக வேலை முடிந்த கையோடு பணம் பட்டுவாடா ஆனதும், ஆச்சரியமாய் பார்த்த அந்த கண்களை வைத்து இன்னும் அரை டஜன் படங்கள் பண்ணலாம்!
============================
டுபுக்கு, பிலிம் கோர்ஸ்லாம் படிக்கிற வசதியோ, அனுமதியோ நான் படிக்கும் காலத்தில் இருந்ததில்லை. கற்பனை நிறைய செய்வேன்! படம் வரைவேன், சுற்றி நண்பர்கள் சூழ, நன்கு "பிலிம் விடுவேன்', அவ்வளவுதான்! ஹீ..ஹீ..
//////////////////////////
சினிமா ஆசையோடு அரை வயிற்றில் உண்டு, ஊருக்கு இன்னமும் இந்திய தபால் துறையை நம்பி கடிதம் எழுதும் பல கலைஞருள் இருவர்
///////////////////////////////
மறாக்காம அவங்களுக்கு என் special வாழ்த்துகளை சொல்லவும்..ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க.. அவர்கள் கனவு நினைவாகட்டும்.. கையிலே வித்தை இருக்கு ஆனா அதை use பண்ண செரியான paltform இல்லையே.. உங்களுடைய இந்த 1 நிமிட படம் அவர்களுக்கு அந்த வாய்ப்பை தரட்டும்
தீபா!அவங்களுக்கு special வாழ்த்துகளை கட்டாயம் தெரிவிக்கிறேன்
Post a Comment