04 September 2007

ஆத்ம விசாரம்!

பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!


நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.


சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?

அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!

எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!


நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.

மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!


மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!


இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?


(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.

மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!

19 comments:

Unknown said...

நாம் வாழ தன் இன்னூயிர் ஈந்த மனீஷ் பீதாம்பரேவுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள். வேறென்ன சொல்லி அவரது குடும்பத்தின் இழப்பை சரிக்கட்ட முடியும் என புரியவில்லை.

Maraboor J Chandrasekaran said...

செல்வன், அதற்குள் படித்து அஞ்சலியும் செலுத்திய உமது அதிவேக திறமைக்கு வாழ்த்துக்கள். ஆம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாம் ப்ரார்த்திப்போமாக!

Agathiyan John Benedict said...

கவர்ச்சித் தோற்றமளித்து கூட்டம் சேர்க்கும் "பொம்மை"களுக்குத் தான் இந்த உலகில் நிறைய மவுசு இருக்கிறது. என்னத்தைச் சொல்லி அழுறது...???

Geetha Sambasivam said...

என் கணவர் பாதுகாப்புக் கணக்குப் பிரிவில் இருந்ததால், நாங்கள் ராணுவக் குடியிருப்புக்களில் இருந்தமையால் இதன் தாக்கம் எனக்கு உங்களைப் போல் நன்றாகவே புரிகிறது. இனிய நண்பர்களை, இம்மாதிரிப்பல நிகழ்வுகளில் பறி கொடுத்திருக்கிறோம். :(((((((((((((((((வெறும் அஞ்சலி செலுத்தினாலும், அந்தக் குழந்தையின் தகப்பன் திரும்பியா வரப் போகிறார்? :((((

துளசி கோபால் said...

கோபுரம் குப்பையாகறதும், குப்பைகள் கோபுரமாகறதும் நம்ம நாட்டுக்குப் புதுசா?

மனீஷ் குடும்பத்துக்கு மனமார்ந்த அனுதாபங்கள்.

நாடு போகும் போக்கு.........(-:

வடுவூர் குமார் said...

மனது பாரமாகிறது.
ஊடகங்கள் அவர்களை சுயசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் BBC ஐ மனதார பாராட்டுகிறேன்.இல்லாவிட்டால் இது கூட நமக்கு தெரியாமல் போயிருக்கக்கூடும்.

வடுவூர் குமார் said...

எங்காவது வாலில் போலி/டோண்டு என்ற பெயர்களை நுழைத்திருந்தால் இன்னும் சில பேராவது படிக்க வசதியாக இருந்திருக்கும். :-((

Maraboor J Chandrasekaran said...

ஜான் பெனிடிக்ட், நம்மால் முடிந்த வரை இந்த கவர்ச்சிகளை நம் வீட்டில் வரவிடக்கூடாது. சண்டை நிறைந்த, ஆபாசங்கள் நிறைந்த படங்களை திருட்டு சீ.டி. யில் எத்தனை பேர் பார்க்கிறார்கள்/ கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், போன்ற படங்கள் மிகக் குறைந்த விலையில், ஒரிஜினலே கிDஐக்கிறது. எத்தனை பெற்றோர் வாங்கி, பிள்ளைகளுக்கு காண்பித்துள்ளனர்? மிகக் குறைவுதான். தேசீயம் வளர்ப்பதே இப்போது மிகத்தேவை.

Maraboor J Chandrasekaran said...

கீதா சாம்பசிவம், போன உயிர் திரும்பாது. ஆனால், போன மானம் காக்கப்படலாமில்லையா? இனியேனும் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் விழித்துக் கொண்டால் நல்லது.

Maraboor J Chandrasekaran said...

துளசி அக்கா, நாடு போகும் போக்கை மாற்ற மனங்கள் மாறத்தான், நம்மால் இயன்றவரை இம்மாதிரியான பதிவுகளை போடுகிறேன்; அதனால் கொஞ்சமேனும் மக்கள் தேசீயம் வளர்க்கலாமில்லையா?

Maraboor J Chandrasekaran said...

வடுவூர் குமார், BBC தான் முதல் முதலில் அயோத்தி மசூதி இடிப்பையும் காட்டியது. ஆனால், பல விஷயங்களைல் அவர்களது பங்களிப்பு, இந்தியா இன்னமும் கீழ்தங்கிய நாடு எனகாட்டுதலிலேயே கவனம் போகிறதோ என்ற்8உம் சமயத்தில் எனக்கு தோன்றும்! நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களில் எத்தனையோ அவர்கள் போடலாமே? அவை ஏன் வருவதில்லை? நிற்க. 'போலி' பட்டம் சூட்டியாவது வாசகர்களை நான் கவர மனம் ஒப்பவில்லை. உங்களாஇ மாதிரி தரம் தெரிந்து வாசிக்கும் நான்கு பேர் எனக்கு போதும். கட்டாயம் நீங்கள் இந்த செய்திகளை உங்கள் நணர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அது போதும். :-)

கபீரன்பன் said...

பி பி சி க்கு நம்மூர்காரர்களின் தயவு தேவையில்லை. நம்மூர் சானல்களுக்கு பசையுள்ளவர்களும் பார்வையாளர் ருசியுமே முக்கியம். அதிகப் பார்வையுள்ள சானலுக்குத்தானே விளம்பரத் தேவதைகளின் கடாட்சம் உண்டு. சினிமா எனும் அபினை ஊட்டி ஊட்டி அதிலிருந்து மீள முடியாமல் சமுதாயத்தை கட்டி வைத்துள்ளது நமது மீடியா உலகம். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று காசு பார்ப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Maraboor J Chandrasekaran said...

கபீரன்பன், அழகான பெயர்! சினிமா என்றாலே, குத்துப்பாட்டு, கற்பழிப்பு என்றாகிவிட்டது. அதிசயமாக சில நல்ல கதைகள் திரைக்கு வந்தால், அதன் வசூல் சொல்லும்படியாக இல்லை. மிக சொற்ப படங்களே கதை வசூல் இரண்டிலும் ஜெயிக்கிறது. சமீபத்தில் வந்த ஒரு படத்தின் இறுதிக் காட்சி, கற்பழிப்போடு முடிந்தது. இதைக் கண்டு ரசிப்பவர்கள், "எதார்த்தம்" எனும் போர்வையில் வக்கிரத்தை வளர்க்கிறார்கள், என்னத்தை சொல்ல? கல்லூரிகள்? வேண்டாம். விமரிசனம் செய்வதை விட நல்ல இளைஞர்கள் கதை பற்றி பேசுவோம், எழுதுவோம். அந்த வீரருக்குஅஞ்சலி செலுத்தும் வகையில், வீட்டிற்கு ஒரு வீரரை வளர்க்க மக்கள் முன் வரவேண்டும். இதற்கு முன்னுதாரணம், ராஜஸ்தான், பஞ்சாப்.

நாமக்கல் சிபி said...

:(

Thanks For Sharing This With us.

Maraboor J Chandrasekaran said...

welcome, Namakkal Sibi :)

வல்லிசிம்ஹன் said...

இன்று கூடக் கிரிக்கெட் தான் கோலோச்சியது.

தொலைக் காட்சியில் கேபிள் வந்த அன்று உண்மை செய்திகள் மறைந்து விட்டன என்று தான் நம்புகிறேன்.

நன்றி சந்திரசேகரன்.

Maraboor J Chandrasekaran said...

வாங்க வல்லிசிம்ஹன் (நிஜப்பெயரே அதுதானா? நல்லாயிருக்கு) தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியையே, வீட்டிலிருந்து நாடு கடத்திட்டால்? எங்க வீட்ல அதன்ன் செஞ்சோம். குழந்தைகளோட விளையாட, கதை சொல்ல நல்லா நேரம் கிடைக்குது.

PPattian said...

ஆமாங்க..இது அநியாயம்தான்.

உங்க பதிவை படிச்சுதான் மனீஷ் குறித்த செய்தி தெரிஞ்சுகிட்டேன்.

இந்தியா தோல்வி அடைஞ்சபோது கூட, அதை வைத்து ஒரு மாதம் "What Went Wrong" ணு ஓட்டினாங்க.. இப்போ வெற்றியடைஞ்சதும் இன்னும் ரெண்டு மாதத்துக்கு இதுதான்.. :(

ஆனா தொல்லைக்காட்சியிலும் சில நல்ல நிகழ்ச்சிகள் இருக்குங்க.. சமீபத்திய உதாரணம் சுட்டி TV (Dora the Explorer, Bumba types). நானெல்லாம் பெரும்பாலும் குழந்தைகள் TV தாங்க பாக்கறேன் ...

Maraboor J Chandrasekaran said...

பட்டியன், வாங்க. நீங்க குழந்தைங்க சீரியல்தான் பார்க்கறீங்க. அதை மட்டும் பார்த்துகிட்டிருந்தால், உங்களை மத்த டீ.வி. பார்க்கறவங்க, "ஒரு மாதிரியா" பார்ப்பாங்களே!? ;)
நாடு போகும் போக்கு.........(-: