27 January 2007

வி.வ.போ - 5(விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டீ -5)

விடாதே பிடி!

முன்னர் ஈ.கோலி எனும் பாக்டீரியா செய்யும் அழிவு வேலைகளைப் பார்த்தோம். (http://maraboorjc.blogspot.com/2007/01/4.html) இந்த கட்டுரையில், ஒரு பாக்டீரியாவின் ஆக்க வேலையை பற்றி பார்ப்போம்!


நீர் ஈரம் உள்ள இடங்களில், மிக குறைவான உணவை உட்கொண்டு, எந்த விதமான நச்சு பொருட்களையும் காற்றில் கலக்காத ஒரு முனிவர் பாக்டீரியா இந்த காலோபாக்டர் க்ரெஸன்ட்டஸ் எனும் பாக்டீரியா. இது தனது நீண்ட தண்டுபோன்ற பகுதியின் மூலம் எந்த சமதளமானாலும், அதனோடு ஒட்டிக் கொள்கிறது! அத்தண்டினுள் பாலிசாக்கரைடு எனும் சர்க்கரை ரசாயன சங்கிலிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில சர்க்கரை மூல சங்கிலிகள் புரத சத்து சங்கிலிகளோடு இணைந்து, ஒரு விதமான ஜவ்வை உருவாக்கியுள்ளன. அந்த ஜவ்வு மூலமே, இந்த ஜந்து சமதளங்களோடு ஒட்டிக்கொள்கின்றன. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது!


நாம் சாதாரணமாகப் பார்க்கும் வஜ்ரம், இன்ன பிற கோந்துகள் ஒரு சதுர இன்ச் பரப்பளவில் சுமார் 2 கிலோ எடையை விடுபடாமல் தான்கி நின்றாலே அதிசயம். fபெவிகாலின் ஜோரு! என்று விளம்பரம் செய்யும் fபெவிகால், அதிக பட்சமாக 5 கிலோ எடையை ப்ரிந்து விழாமல் தாங்கும். ஆனால், இந்த பாக்டீரிய ஜவ்வுன் தாங்கும் சக்தி எவ்வளவு தெரியுமா? ஒரு சதுர இன்ச்க்கு 5 டன்!(ஒரு டன் = 1000 கிலோ. இந்த பாக்டீரியாவின் ஜவ்வை பல மடங்காக பரபணு சோதனை மூலம் பன்மடங்காக்கி, உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்தால், உலகிலேயே மிக அதிகமான பிடிப்பு சக்தி கொண்ட பசை தயார்! ப்ளூமிங்டன் மற்றும் ப்ரவுன் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


மருத்துவ அறுவை சிகிச்சைக்கு இரு பாகங்களை ஒட்ட இயற்கையிலிருந்து தயாரித்த ஜவ்வாகவும், கட்டிடக் கலை மற்றும் பொறியியல் துறைகளில் எந்த பொருளையும் ஒட்ட இந்த ஜவ்வு ஒரு வரப்ரசாதமாக இருக்கும்!


ஆனால், ஒரே ஒரு ப்ரச்னை! எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதால், எந்த கலத்தில்( பாத்திரத்தில்) இயந்திரத்தில் இதை தயாரித்தாலும், அந்த பத்திரத்தோடு இது ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாமல் போய்விட்டால்? !!


ஆராய்ச்சி தொடர்கிறது...

7 comments:

செந்தழல் ரவி said...

கலக்குங்க...அமீபா பற்றி சொன்னா நல்லாருக்கும்..

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க, செந்தழல். வருகைக்கு நன்றி. அமீபா, எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் தானே! சொன்னாலும் தமிழ் மணத்துல எத்தன பேர் பயனடையறாங்கன்னு தெரியல! :( பாருங்க, ராஜ் முத்தரசன் பத்தி எழுதினேன். அமெரிக்க மக்கள் ஸ்பினாச்சைப் பார்த்து பேதி ஆகிகிட்டு இருந்தாங்க; அதைத் தீர்க்க ஒரு எளிமையான கருவியைக் கண்டு பிடிச்சு, சுய தம்பட்டம் அடிக்காத விஞ்ஞானி. நானா தேடிப் போய் அவரிடம் மின்னஞ்சல் செய்து, கட்டுரை வெளியிட்டேன்; அதற்கு பின்னூட்டம்? ____?? சிவஞானம்ஜி, விஞ்ஞானக் கடுரைல்லாம் வேணும்னு கேட்கிறார். அவர் வயதில் அவர் காட்டும் ஆர்வம், இளைஞர்களிடையே இல்லை.

நன்மனம் said...

ஆகா நல்ல பாக்டீரியாவா இருக்கே!!!

பிரித்தெடுக்க கூடிய விதத்தில்

(அதாவது கேக் பாத்திரத்தில வெண்ணை தடவி ஒட்டாம எடுப்பாங்களே.... ;-) )

இத வளர்க ஏதாவது செய்யலாமே.

தகவலுக்கு நன்றி திரு.'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் அவர்களே.

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க நன்மணம். வருகைக்கு நன்றி. விஞ்ஞான கட்டுரைகளை கண்டுகொண்டமைக்கு நன்றி. சிறுவர்களிடையே பரப்பவும். வி.வ.போ. (விஞ்ஞானத்த வளர்க்க போறேண்டி) இதற்கு முன்பான பதிவுகளையும் படித்து, மாணாக்கரிடையே பரப்ப வேண்டுகிறேன். ஆமாம், ப்ளாஸ்டிக் ரசாயனங்களில் அம்மாதிரியான ஒட்டா திறம் படைத்த பாத்திரங்கள் செய்யும் பொருட்கள் உள்ளன. எப்படி இந்த நல்ல பாக்டீரியாவை வளர்ப்பது என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

சுந்தரவடிவேல் said...

பதிவுக்கு நன்றி.
அறிவியல் செய்திகளைப் பதியும்போது நீங்கள் படித்த சுட்டிகளையும், தொடர்புள்ள வேறு சுட்டிகளையும் தந்தால், அவை குறித்து மேலும் படிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராஜ் முத்தரசனின் பதிவும் நன்றாக இருக்கிறது.

ஜெய. சந்திரசேகரன் said...

சுந்தரவடிவேல்,
வருகைக்கு நன்றி. இனி சுட்டி போடுகிறேன். இதோ, இந்த செய்திக்கு :

http://www.machinedesign.com/ASP/viewSelectedArticle.asp?strArticleId=61625&strSite=MDSite&Screen=CURRENTISSUE&CatID=3

கொஞ்சம் பெரிசு அதான் பயந்தேன்!

ஜெய. சந்திரசேகரன் said...
This comment has been removed by the author.