02 January 2007

யார் மிருகம்?

காஷ்மீர் ஸ்ரீநகர் அருகேயுள்ள த்ரால் நகரத்தின் வெளிக் கிராமங்களில் ஒன்றான 'மண்டோரா' வில் சென்ற நவம்பர் மாதம் நடந்த துயர சம்பவம் இது!

காட்டிலிருந்து கரடி ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டது. வழியில் அகப்பட்ட குழந்தையையும் பிடித்துச் சென்றது! அதைக் கண்ட ஊரார், உடனே அதனை விரட்டினர். என்ன தோன்றிற்றோ தெரியவில்லை! அது குழந்தையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால், இரவு முழுதும் காத்திருந்த ஊரார், கரடி மீண்டும் உள்ளே நுழைகையில், அதனைப் பிடித்து அடித்து, எரித்துக் கொன்றுவிட்டனர்! வனவிலங்கு அதிகாரிகள் ஒரு சிலர் அங்கு போனாலும், இந்த இழிசெயலை தடுக்க முடியாமல் போனது. காரணம்? "மக்கள் கண்களில் தெரிந்த கொலை வெறி!" என்கிறார்களாம்!
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, கருப்புக் கரடி, அதிசய பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினங்களில் ஒன்று. ஆனால், இரக்கமின்றி அதை கொலை செய்துவிட்டார்கள். அதை விடக் கொடுமை, கரடி பிடிபட்ட செய்தி கேட்டு அங்கே போன தனியார் திலைகாட்சியினர்! கொல்வதை தடுக்க முற்படாமல், சாவதானமாக, அந்த அடித்துக் கொடுமை செய்யும் காட்ச்சியையும், எரித்து கொலை செய்யும் காட்சியையும், படம் பிடித்து தொலைகாட்சியில் வெளியிட்டார்கள்! இதனை நமது நாட்டிம் முதல் எதிர்கண்ணோட்ட தகவல்தளமான BBC வெளியிட்டது! பாபர் மசூதி இடிக்கப் பட்ட போதும், குஜராத் கலவரத்தின் போதும், மும்பை வெடிகுண்டு செய்தியையும், முண்டியடித்து முதலில் உலகுக்கு தெரியச் செய்தது BBC! நாம் சுதந்திரம் பெற்று எத்தனை காலமாகியும், நம்முள் உள்ள சில சில தவறான செய்திகளை வெளியிட்டு குளிர் காய்வதை கடமையாக செய்கிறது. இவர்களுக்கு இப்படி செய்திகளை திரட்டி த் தருபவர் யார்? அவர்க்ளை முதலில் இனம் கண்டு தேச துரோக குற்றத்துக்கு அவர்களை உள்ளே தள்ளலாம். தப்பே இல்லை. இதை கருத்து சுதந்திரம் என்றோ, பத்திரிகை சுதந்திரம் என்றோ சொல்லி ஒருவர் நழுவக் கூடாது. சரி, விஷயத்துக்கு வருவோம். கரடி கொலையில் காவலர் விசாரணையின் கீழ் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீகார் காடுகளில் சமீபத்தில் வெறிபிடித்த யானை பலரை கொன்று குவித்து அட்டகாசம் செய்துள்ளது. அதனை அதிகாரிகளே சுட்டு கொன்றுவிட்டனர். அது பரவாயில்லை. ஏனெனில், யானைக்கு 'மதம்' பிடித்து விட்டது. எத்தனையோ முயற்சி செய்தும், மருத்துவர்களால் அதனை கட்டுப் படுத்த முடியவில்லை! ஆனால், இங்கே? குழந்தை என்று தெரிந்தோ, அல்லது, ஆட்கள் கூச்சல் கேட்டோ, ஒரு விலங்கான கரடி கூட, குழந்தையை கீழே போட்டுச் சென்று விட்டது. ஆனால், ஆறறிவு படைத்த, பண்பட்ட மனிதர்கள், காத்திருந்து, ஒரு மிருகத்தை பிடித்து, அடித்து, எரித்தே கொன்றுவிட்டார்கள். இப்போழுது சொல்லுங்கள்? யார் மிருகம்?

8 comments:

Deepa said...

எனக்கு இதை படித்த பிறகு இந்த பாட்டு தான் ஞ்யாபகம் வருது.
**********************
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.. கருடா சௌக்கியமா..
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.. எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது..
**************************
ஆமாம்..அதில் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது..புரிந்து கொள்ளும் பொறுமை தான் இல்லாம பொயிவிட்டது

Johan-Paris said...

எப்படிப் பார்த்தாலும்;மனிதர் தான் மூர்க்கமானவர்கள். இதைத் தவிர்த்திருக்கலாம். மேலும் யானைக்கு இனப்பெருக்க காலத்திலேயே மதம் பிடிப்பதாகவும் ;மதநீர் வழியத் தொடங்கியதும்;அவற்றைச் சோடி சேரவிட்டால்; அடுத்த ஒரு வருடத்திற்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லையென தாய்லாந்து யானைபிடித்துப் பழக்குவோர் ஒரு விவரணச்சித்திரத்தில் கூறக் கேட்டேன்.
அவற்றின் வாழ்விடங்களை அபகரித்து;அவற்றை நகருள் வரவைத்தவர்கள் நாம்.
தண்டனை அவற்றுக்கு!!!இதே தண்டனையை ஒரு யானைக்கோ,குரங்குக்கோ கொடுக்க நம் மக்கள் அஞ்சுவார்கள். காரணம் பிள்ளையார்,அனுமார் மேல் உள்ள பயபக்தி!!
இந்த பிபிசி....இப்படித்தான்; அங்கே குலைகுலையா??விபச்சாரிகளைக் கொன்று குவிக்கிறான்.இவன் நம்மளைப் பார்த்துக் கொண்டு நிற்ப்பான். விட்டுத் தள்ளுங்க??
இனிய புதுவருட வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

ஜெய. சந்திரசேகரன் said...

தீபா, என்ன சொல்ல வரேங்க? :-( கரடி அங்கயே காட்டுக்குள்ள இருந்திருக்கலாம்னா? அது அறிவு கெட்ட கரடி! சே! ரொம்ப மோசம்.

ஜெய. சந்திரசேகரன் said...

ஜோகன், புது வருட வாழ்த்துக்கள்! நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை. வருகைக்கு நன்றி.

Kowsalya said...

If I extapolate your thoughts, we should stop using even mosquito repellants and disinfectants ;)

பொன்ஸ்~~Poorna said...

சந்திரா,
கௌசல்யா சொல்வதை வழிமொழிகிறேன். சக உயிரை நேசிப்பதானால், கொசுக்களையும் ஈக்களையும் கூட துன்புறுத்தக் கூடாது. தன்னைக் கடிக்காத பூக்கொசுக்களைக்கூட, வேண்டுமென்றே துன்புறுத்துபவர்களும் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள்.

பிபிசி படம் எடுத்துப் போட்டுவிட்டார்கள் என்று சத்தம்போடும் போது, அவர்கள் போட்ட பின்னராவது நம் போன்றவர்களுக்கு இப்படியும் நடக்கிறது என்று தெரிகிறதே, இந்த விழிப்புணர்வையாவது அளிக்கிறதே என்று தோன்றுகிறது எனக்கு.

சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடந்ததா, என்ன தண்டனை கிடைத்தது என்றெல்லாம் இதே பிபிசியோ அல்லது நம்மூர் பத்திரிக்கையோ யாராவது நம் மக்களுக்கு அளித்தால் தான் இன்னும் ஒரு யானையோ கரடியோ புலியோ மனிதனின் கொலை வெறிக்கு அகப்படாமல் இருக்கும். இல்லையென்றால் இதுவே தொடரும்.

ஒரு விதத்தில், நம் மக்களின் கொலைவெறி, வன்முறை மீதான கண்டனத்தை விட, நம் வீட்டின் இந்த அசிங்கங்கள் வெளியாளுக்குத் தெரிந்து விட்டதே என்ற உணர்வே உங்களின் பதிவில் எனக்கு மேலோங்கி இருப்பதாகத் தெரிகிறது. எப்படியோ இவர்கள் திருந்தினால் மகிழ்ச்சிதான்.

enRenRum-anbudan.BALA said...

Torturing and killing a human or an animal is one and the same. I don't see any difference !

This is really atrocious !

What is the point in having the SIXTH sense :-(

Sorry for writing in English !!!

ஜெய. சந்திரசேகரன் said...

Kowsalya- it is extrapolate ;)

கவுசல்யா, பொன்ஸ், நான் சொன்ன வந்த கருத்தே, மனிதர்களுக்கு சகிப்புத்தன்மையும், மனிதாபிமானமும் குறைந்து வருகிறது என்பதே! அது தவிர BBC எனும் தொலைக்காட்சியினன், முன்னிருந்தே, நமது நாட்டின் அசிங்கங்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறான். அங்கில்லாத அசிங்கங்களா? எனவே, அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவும் , இந்த பதிவு. மற்றபடி கொசு அடிப்பதில் நான் புலியாக்கும் ;)

பொன்ஸ் - BBC சொல்லித்தான் நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பது இல்லை. ஏன் எத்தனை நல்ல சமாசாரங்கள் இங்கு நடக்கிறது? அதை ஏன் அவன் வெளிக்கொணர்வதில்லை?