01 November 2005

சிந்தனைக் கட்டுரை- சாதிகள் இல்லையடி பாப்பா? இல்லை.. மனிதா!!

பாரதி பாடியதுபோல் இனி சாதியைச்சாடி, அதைவிடச் சிறப்பாக யாரும் பாடமுடியாது. அவரது தாசன் பாரதிதாசன். அவரைத் துணைக்கு அழைத்து, பார்ப்பனரை சீண்டிவிடுகிற சிறியவர் பற்றி என்ன சொல்வது? பாரதியின் கவித்துவதுக்கும், தீர்க்கதரிசனத்துக்கும் தான் எல்லோரும் தலை வணங்குகிறார்களே தவிர, அவரது சாதிக்கு அல்ல. அம்பேத்கர், காந்தி, நேரு, படேல், என்று அழைக்கிறார்களே, இதெல்லாம், அன்னாரது, பெயரல்ல! சாதி! அதேபோல், மற்றொரு விசித்திரம் குஜராத்தில் இன்றும் நடக்கிறது! பாய், பேஹன், என்றால், சகோதரன், சகோதரி (Bhai, Bahen). ஆனால், அங்கு, பெயருக்கு நடுவே, இது நுழைந்துகொண்டுவிட்டது!
சர்தார் வல்லப்ஹ் பாய் படேல், என்ற தலைவரது பெயரில், வல்லப்ஹ் என்புது மட்டும் தான் அவரது பெயர். மற்றதெல்லாம்..? பாய் இங்கே எப்படி வந்தது? சாதி- படேல் எப்படி வந்தது?

கிருஷ்ணனை பார்ப்பனர் என்று சொல்பவர்க்கு, புராணமும் தெரியவில்லை, பொது அறிவும் இருக்கவில்லை!
அவர் இடையர் (Yadav) குலத்தவர்! அவரை பூசை செய்து, ஆராதிப்பது பார்ப்பனர் மட்டுமா? அவர்கள் சாதி
பார்த்திருந்தால், ஒரு இடையர் குலத்தவனை ஆராதிப்பார்களா? கிருஷ்ணனின் பல செய்கைகள் தவறெனத் தோன்றினாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு பின் கதையுள்ளதை மேற்புல் உண்டவற்கு எங்கே தெரியப்போகிறது?வெளியே வேஷம், உள்ளே பயம். ''பிள்ளக்கி பேரு வெக்கணும், காது குத்தணும், பொண்ணு சடங்காயிட்டா, கல்யாண நாள் தேதி குறிக்கோணும், .. (கோவிலில்).. ''சாமி, பாத்து நல்லா நிதானமா செய்யுங்க, பய வெளிநாடு போறான். பூச பலமா மனசுல நிக்கிற மாதிரி செய்யுங்க..", ஏன்?.. தலைவருக்கு இனி நல்லதே நடக்க, என்ன பரிகாரம்? சரி, மஞ்சத் துண்ட தோள விட்டு இறக்கக் கூடாது..'' இப்படி பட்ட அத்தியாவசியங்களுக்கு தேவைப்படும் ஒரு சாதியினர், ''போட்டுத் தாக்கு'' என்றதும், வாய் மூடியிருத்தலே, அரைவேக்காடுகளுக்கு, துளிர் விட வாய்ப்பு தருகிறது. அதே மக்கள் தலை தூக்கினால், உலகம் தாளுமா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல், வாமன அவதாரத்திலிருந்து வந்தது. மூர்க்க அரசன், ஆனால், கொடை வள்ளல், மகாபலி. கேட்டவர்க்கு இல்லை எனச்சொல்லாமல், அள்ளித்தருபவன். அவனை அழிக்க, ஒரு அந்தணன் உருவம் தான், வேங்கடவனுக்கே வேண்டியிருந்தது! மிகக் குள்ளமான அந்தணனைப் பார்த்து, 'இவன் என்ன கேட்கப் போகிறான்', என ஏளனப் பார்வை பார்த்த அரசனிடம், மூண்றடி மண் கேட்டான், வாமனன்! கேள்வியின், நிஜத்தை புரிந்து கொண்ட ராஜ குரு சுக்ராச்சாரியார், ஒரு புழுவின் உரு கொண்டு, தாரைவார்க்கும், கிண்டியின் வாயை அடைத்துக் கொண்டு, அமர்ந்தார். வாமனனோ, ஒரு தர்பைப் புல்லை எடுத்து, கிண்டியின் துவாரத்தைக் குத்தினான்! கண்ணிளந்த சுக்ராச்சாரியாரால், அந்தணனின் செயலை நிறுத்த முடியவில்லை! கிண்டித் துவாரத்திலிருந்து, நீர் வெளியேற, மாமன்னன் தானம் அளித்துவிட்டான்! உலகளந்தப் பெருமானாக, நீடுயரம் கொண்டு, பூமியை ஒரு காலால், விண்ணை ஒரு காலால், அளந்துவிட்டான்! மற்றொரு அடி? எவர்க்கும் அவரவர் தலை, உயிர்- அதைவிட மேலான ஒன்று இருக்க முடியுமா? தலை தாழ்ந்தான் அரசன். மூன்றாம் அடியை தலைமேல் வைத்துப் பெற்றான் அந்தணன்! புல் ஆயுதமான கதை தெரிந்ததா?

''நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திரமும் இன்றி, வஞ்சனை சொல்வாரடி, ... வாய்ச்சொல்லில் வீரரடி..'' என்று பாரதி பாடியது, இத்தகைய அரை வேக்காடுகளைப் பார்த்துத் தான்! எங்கே, இதே பழிச் சொல்லை, ஒரு தேவரையோ, மறவரையோ பார்த்துச் சொல்லமுடியுமா? வார்த்தை விழுமுன், வீச்சறுவாள் பறக்கும்! மென்மையான குணத்தை வைத்து ஒருவனை எடைபோடமுடியாது!
சாணக்கியர் என்று பேர் வாங்கிய ராஜாஜியினால்தான், காங்கிரஸ் தளர்ந்து, திராவிடக் கட்சிகள் தலையெடுத்தன! அவர் பார்ப்பனர் என்று எல்லோரும் தூற்றினாரா? இல்லையே? பெரியாரும், அண்ணாவும், ராஜாஜியும் எத்தனை சிறந்த நண்பர்கள் என்பது ஊரறியும்!
மக்கள் பத்திரிகைகள், விகடன், கல்கி, கலைமகள், மற்றும் எழுத்தாளர்கள் சுஜாதா, வாலி, மாலன் போன்றோரை ஏனைய சாதியினர் புறக்கணிக்க முடியுமா? கோவில்களில் அந்தணம் மறையுமா? இதெல்லாம் மீறி, மொழியையும், நாட்டையும், மக்கள் நல்லிணக்கத்தையும் மனதில் கொள்வோர், இனி வீணாகச் சாதிப் பேயை தட்டி எழுப்பமாட்டார்கள் என நம்பி, வாழ்வோமாக!
கவியோகி சுத்தானந்தர், பாடியது போல்,
''எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்,
எல்லாரும் ஆடுங்கள், எல்லாரும் பாடுங்கள், இன்பமே நமது தெய்வம்,
அல்லா,பரமபிதா,அரிகரப் பிரம்மம் என்றும், அம்மையப்பா என்றும்,
சொல்லிவணங்குவோம், சொல்லறியாச்சுடரை, ஜோதி ஒளியில் என்றே!
சாதிமத பேதம், தாளாத சுத்தனவன், சச்சிதானந்தப் பெருமான்,
ஆதியந்தமில்லாதான், ஆர்வமுடன் அழைத்தால், அன்பருள்ளே வருவான்!
இல்லையென்பாருள்ளும், இருக்கிறேன் என்பவன், இதயத்தில் கூத்திடுவான்,
எல்லையில்லா உலகில், எங்கும் உயிர்க்குயிராம் இன்னருள் பூத்திடுவான்!''

என்பதை ஆனந்த பள்ளாகப் பாடி, எல்லோரும் `ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என வாழ்ந்து, ஒற்றுமைக்கு வழிவகுப்போம்.

9 comments:

hameed abdulla said...

"ONTRE KULAM ORUVANE DAEVAN" enbathanai manitharkal unarnthu purinthu nadanthaal ulagam amaithyaka irukkum......

dondu(#4800161) said...

"கிருஷ்ணனை பார்ப்பனர் என்று சொல்பவர்க்கு, புராணமும் தெரியவில்லை, பொது அறிவும் இருக்கவில்லை!"
கிருஷ்ணனை மட்டுமா பார்ப்பனன் என்றார்கள். ராமரையும்தான். ராவணன் திராவிடனாம். அந்தோ அவர்கள் அறியாமை. ராமர் க்ஷத்திரியர், ராவணன் மற்றும் கும்பகர்ணன்தான் பார்ப்பனர்கள். அவர்களைக் கொன்றதற்காக ராமருக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடிக்க, அவர் அதற்காகப் பரிகாரமும் செய்கிறார்.

மேலும், ராமாயணத்தில் ராவணனக்குரிய உயர் பண்புகள் எதையும் வால்மீகியோ கம்பரோ மறுக்கவில்லை. அதனை பண்புகள் பெற்று, பெறர்கரியா வரங்கள் பெற்ற ராவணன் செய்த ஒரே தவறு சீதையைச் சிறையெடுத்தது. அதிலிருந்து அவனை மீட்க கும்பகர்ணன், வீடணன் இருவருமே முயன்றார்கள், தத்தமுக்குத் தெரிந்த வழியில்.

பின்னூட்டத்தில் இவை அத்தனையும் எழுத முடியாது. இதற்கென்றே தனிப்பதிவு போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெய. சந்திரசேகரன் said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! ஹமீது அப்துல்லா, தங்களது சொல்லே சரி. இதை மறந்து, ஜாதித் தீயினை ஊதுபவர்க்கு நாம் என்ன சொல்வது? குஷ்பு, சுஹாசினி விவகாரத்தில் திடீர்ன முக்கை நுழைத்த ஒர் 'மாபெரும்' தலைவர், தேவையில்லமல், அத்தீயை கைகளில் ஏந்தியிருப்பது, மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. அதனால் தான், உங்கள் கடிதத்தை மீண்டும் இன்று திறந்து பார்த்தேன்!

ஜெய. சந்திரசேகரன் said...

வழக்கம் போல், தங்கள் பதிலும், தங்கள் தனிப் பதிவுக்கான செய்தியும் நன்கு. புராணத்தைக் கட்டுரை எழுதக் கையில் எடுத்துக் கொண்டால், அதற்கு, தீவிரமாக படித்து, கருத்தை மனத்தில் நிறுத்த வேண்டும். தங்கள் பதில் அக்கருத்தை நன்கு தெளிவு படுத்தியது, நன்றி!

dondu(#4800161) said...

சந்திரசேகர் அவர்களே,

இது பற்றி நான் கூறியபடி பதிவை போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெய. சந்திரசேகரன் said...

I went through your blog,very informative and vivid!
Chandrasekaran

thamizhachchi said...

ஐயா திருவாளர் சந்திரசேகரன் அவர்களே. உங்கள் பதிவுக்கு நன்றி இதன் மூலம் நான் 2 சாதிகளின் பெயர்களை அறிந்து கொண்டேன் உங்கள் நோக்கம் சாதிகளை அறிமுகப்படுத்துவதா.? அப்படியாயின் உங்களுக்கு வெற்றி.

//எங்கே, இதே பழிச் சொல்லை, ஒரு தேவரையோ, மறவரையோ பார்த்துச் சொல்லமுடியுமா? வார்த்தை விழுமுன்,//

சாதிகள் இல்லையடி பாப்பா என்று தலைப்பெடுத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எழுதிய நீங்கள் செய்தது என்ன?
உங்கள் மனசில் அந்தப்பாகுபாடுகள் கருவறுக்கப்படவில்லை கருவறுக்கப்பட்டிருந்தால் சாதிப்பிரிவுகள் மூன்றை இங்கு சுட்டிக்காட்டியிருக்க மாட்டீர்கள்.

சாதியில்லை என்று எழுதிய நீங்கள். மற்றர்வகளால் இருந்ததாக கருதப்பட்ட கருதப்படுகிற சாதிகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அதனால் தான் எழுத்தில் வந்தது. இதை எப்ப நீங்கள் விடப்போறீர்கள்.?

தப்பித்தவிற பேச்சிற்கு கூட இப்படியான பிரிவினைகள் என்று வராமல் விடுகிறதோ அன்று தான் ஒன்றே குலம் என்ற கொள்கை நிலைப்பெறும் அல்லாதவிடத்து உங்களை மாதிரி எழுத்தாளர்கள் சாதியத்தை அழிக்கிறம் என்று கொண்டு அதை புதுப்பித்து புதுப்பித்து நினைவு தான் படுத்திக்கொண்டிருப்பீர்கள். இருக்கிறீர்கள். முதலில் இந்த சாதிகளை உச்சரிப்பதை நிறுத்துங்கள் பின்னர் குலம் ஒன்றாகும்.

சுஜாதா மாலன் போன்ற எழுத்தாளர்களையும் விகடன் கலைமகள் போன்ற பத்திரிக்கைகளையும் ஏன் பிரிக்கிறீர்கள்? ஏனைய சாதியினர் என்றால் யார்? நீங்களே பார்க்கிறீர்களே ஏனைய சாதி இந்தச்சாதி என்று??

//ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என வாழ்ந்து, ஒற்றுமைக்கு வழிவகுப்போம்//

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி தமிழச்சி,
எனது எல்லாப் பதிப்புகளையும் பார்த்தால் தாங்கள் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்! சாதி(தீ) என் குறிப்பிட்டு வருத்தப்படிகிறேனே தவிர, நான் கூறிதான், அவ்விரண்டு சாதியை தாங்கள் அறிந்து கொண்டீர்கள் என நம்புவது சற்று கடினமாகயிருக்கிறது!! அதேபோல், நான் என்றும் இதைப் பற்றி எனது பதிவுகளில் எழுதுவதில்லை என்றே சபதமெடுத்திருக்கிறேன்; ஆனால் யார் விட்டார்கள்? வீர வன்னியன் என்று ஒரு சாராரும், அதை கை தட்டி உற்சாகப் படுத்த பல அநாமதேயங்களும்,(anonymous) வழிமொழிவது தங்கள் கண்களில் படாதது அதிசயமே!!
முந்திய கடிதங்களில் சாகுல் அமீதும், கோண்டு ராகவனும் எழுதிய கருத்துகளைப் படித்துப் பார்த்தால், தாங்கள் என் மீதுள்ள தப்பான அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதே போல், நான் கூறிய செய்தியில் என்ன பிழை உள்ளது? அந்த பத்திரிகை ஆசிரியர்கள், தமிழ் வல்லுனர்கள் சாதியால் உயராமல், தங்கள் செயலால் உயர்ந்ததைதான் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்! அதைத்தான் நாமும் பின் பற்ற வேண்டுமென இறைஞ்சுகிறேன்! இந்த பதிப்பு வந்த காரணமே, சா(தீ) யை வளர்க்க அல்ல, நீருற்றி அணைக்க!! காரணம், வீர______ தனது பதிப்பில்,தேவை இல்லாமல், தக்க கருத்துச் செறிவு இல்லாமல், புராண கடவுளர்களை சாதியால் கூறு போடப் பார்த்தார்; அதில் தேவையின்றி நீங்கள் குறிப்பிட்ட சாதிகளும் இடம் பெற்றன! அதை களையத் தான் நான் பதிப்பு போட வேண்டியதாயிற்று!!

உங்களைப்போல், ஏனைய பலர் போல், சாதியில்லாச் சமுதாயம் மலர நானும் விடியலை எதிர்நோக்கியுள்ளேன்! ஒரு சில சில்வண்டுகள் சப்தமிட்டதை ரீங்காரம் என எண்ணியது எனது தவறுதான்; எனவே சாதி குறித்து நான் (இது போன்ற விளக்கக் கடிதங்கள் தவிர்த்து) இனி பதிவுகள் போட என்றும் எண்ணமாட்டேன் என்பது எனக்கு நானே வகுத்துக் கொண்ட அரண்!!
வணக்கத்துடன்,
மரபூரான்

விடாதுகருப்பு said...

இராவணன் பார்ப்பனன் இல்லை என்பதனை எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.