15 November 2006

இலவசம் தேன்கூடு போட்டிக்கு

தவறிய நேரம், தவிச்ச படிப்பு சோத்துக்கு லாட்டரி இலவசம்
ராத்திரி முழிப்பு ஆத்தா பழிப்பு கண்களில் வளையங்கள் இலவசம்
குப்புற படுத்து குத்துப் படம் பார்த்தா, பெண்டுவலி முதுகில் இலவசம்
கணக்கில்லாம புகை பிடிச்சா காசம், கான்சர் இலவசம்
வீட்டை மறந்தா மத்தவ கிட்ட எய்ட்ஸ் நோயும் இலவசம்
வாயில வார்த்தை தடிச்சு இருந்தா தர்ம அடிகளும் இலவசம்
எதுக்கும் அடிதடி வம்புன்னு போனா, அடுத்தவன் பகையும் இலவசம்
பொங்கப் பண்டிகை தீபாவளின்னு வேட்டிச் சட்டை இலவசம்
கட்சிக்காரன் முட்டாளாக்க டி.வி. கொடுத்தான் இலவசம்,
பாவி மனுஷா, மேலும் உன்னை சோம்பச் செய்யும் இலவசம்
எல்லாஞ் சரிதான் ஏளனம் செஞ்சா ஏமாற்றம் என்றும் இலவசம்!

இந்த இலவசங்கள் தேவையா?

எடுத்ததை நடத்தி, தடுப்பதை விடுத்தா வெற்றிப் பாதை இலவசம்
வாழற வாழ்க்கை ரசிச்சு வாழ்ந்தா நீங்கா மகிழ்ச்சி இலவசம்!

5 comments:

Anonymous said...

பின்னூட்டத்தை ஒரே பெட்டியில் வருமாறு செய்யுங்களேன்...

செந்தழல் ரவி

Maraboor J Chandrasekaran said...

செந்தழல் ரவி,
நானே ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறி, நேத்துல இருந்து ரொம்ப கஷ்டப்படறேன். பழைய வெர்ஷனுக்கு போக வழியே கிடையாதா? எல்லா பின்னூட்டமும் ஒரே கட்டத்துல எப்படி போடறதுன்னு நீங்க சொல்லிக் குடுத்தா வசதியா இருக்கும். முதல்ல, என்னோட இலவசம்- தேன்கூடுக்கான கவிதையை தமிழ்மணத்துல சேர்க்க முடியல. அடொம் fபீட் ஆட்டம் கண்டுகிடுச்சு! அதயும் சரி செய்ய வழி யாராச்சும் சொன்னா புண்ணியமா போகும். பதிவ உள்ள சேர்க்க வழி சொல்லுங்கப்பா!

Unknown said...

உங்க கவிதைல எத்தனை "இலவசம்" இருக்குன்னு எண்ணி சொன்னா எதாவது இலவசமா கிடைக்குமா? ;))

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Maraboor J Chandrasekaran said...

உங்க பேர்லயே அருட்பெருங்கோ (இலவசம் வேணாங்கோ- ன்னு) இருக்கே? வாழ்த்துக்கு நன்றி. பாம்புப் புத்துக்குள்ள.... அத மாதிரி.. இந்த பீட்டா ப்ளாக்கர் மக்கர் செய்யறத் யாராச்சும் சரி செஞ்சீங்கன்னா, இலவசமா உங்க திசை பார்த்து, கீழ விழுந்து கும்படறேன் ;)

ரவி said...

கமண்ட் செட்டிங்ஸ் பகுதியில் ஷோ கமண்ட் இன் சிங்கிள் விண்டோ அப்படீன்னு ஒரு காம்போ பாக்ஸ் இருக்கு...அதை கிளிக் செய்து ப்ளாகை ரீபப்ளிஷ் செய்தால் போதும்...

அய்யோ...இப்பவே கமெண்ட் சிங்கிள் விண்டோவில தான் வருது...இந்த பின்னூட்டம் இவ்ளோ லேட்டா போட்டதுக்கு மன்னிச்சுக்கோங்க