வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
17 November 2006
பீட்டா போட்டா, பூட்ட நீ!
பீடா போட்டா வாய் செவக்கும்கிற மாதிரி, ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறினால், மூஞ்சி சிவக்கும். தெரியாத்தனமா மறிட்டேன். கடல் கணேசன் அப்பவே வார்ன் பண்ணாரு. கடலே சொல்லி கேக்காம, கவுந்துட்டேன்! :-(எப்படி html எடிட் செஞ்சாலும், பார்டர் போலிஸ் மாதிரி, "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே உள்ளது, சின்ன அயிட்டமா ஒண்ணை பதிவிட்டு atom feed ஆட்டம் காணுதா இல்லையான்னு பார்க்கச் சொல்லும்! சரி 'test' அப்படீன்னு ஒரே ஒரு வார்த்தை எழுதி அதை பதிவிட்டேன். மீண்டும் "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே ......." என்று பழைய பாட்டையே படித்தது! என் சிற்றறிவுக்கு பட்டபடி, maraboorjc ப்ளாக்கிலிருந்து நீக்கி, அவற்றை எனது மற்ற்றொரு ப்ளாக்கான "சிரிச்சுவை" யில் போட்டு வைத்திருக்கிறேன். முன்பு பின்னூட்டம் தந்த நண்பர்கள் அரைத்த மாவையே அரைக்கிறான் என்று ஏசாமல், மீண்டும் பின்னூட்டுங்கள்! பின்னி பெடலெடுக்காதீர்கள்! பீட்டா ப்ரச்னை சரியானால், தமிழன்னைக்கு (அன்னைக்) காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டுள்ளேன்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அய்யா, நெஜந்தானுங்கோ! html வெச்சுக்கிட்டு நானும் எல்லா ப்ரயத்தனப்பட்டும், பெங்களூர் பதிவர் தீபா கோவிந்த் என் மேல் இறக்கப்பட்டு அதை சரிசெய்யும் முயற்சியிலுமிறங்கியுள்ளார்! ஆனால், திடீரென, பதிவுகளை தமிழ்மணம் ஏற்றுக்கொள்கிறது!!! யாதொரு மாற்றமும் செய்யாமல்! அதேபோல் பின்னூட்டங்களிலும் எனது பின்னூட்டப்பட்ட பதிவுகள் வருமா? தமிழ்த் தாய்க்கே வெளிச்சம்!
Post a Comment