09 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-5.



அடுத்து, புள்ளமங்கைக் கோயிலில் சமத்துவ நோக்குகொண்ட சிற்பங்கள் உள்ளன!! ஆம், சிவன் கோயிலில் ராமாயணக் காட்சிகள்!!
ஒரு சிலவற்றைப் பார்ப்போமா?
வில்லெடுத்த ராமனின் காட்சி! அந்த வில்லை எடுத்து தூக்கிப் பிடித்த அதே ஜோரில் ஒரு மந்தஹாசப் புன்னகை புரியும் ராமன்! ராவணனை அழிக்க ஒரே ஒரு அம்பை வீசுகிறான்! அந்த நொடியில் அவன் நிற்கும் அழகே அழகு! வீரு கொண்ட நிமிர்ந்த நோக்கு. அருகில் சீதை(?) வியக்க, சுற்றுமுள்ள வானரங்கள் ஆச்சரியப்பட, வலது கால் கீழ் அசுரர்கள் பொடிபட, மேலிருந்து அவதாரத்தின் நோக்கம் நிறைவேறப் போவதால், வாழ்த்தும் தேவர்கள். கடவுள் மிகப் பெரியவன் என்பதையோ, அல்லது விசுவரூபத்தைக் குறிக்கவோ கைகள் ஆச்சரியக் குறியை காட்டுவதுபோல், சிற்பி இக்காட்சியை வடித்துள்ளான்.


மற்றொரு சிதைந்த ஆனால் சிந்தை கவர்ந்த சிற்பம், சூர்ப்பனகை மூக்கறுப்பு! ஒரு பக்கம் பயந்து போன சீதையை ராமன் தேற்றிக்கொண்டிருக்க, மறுபக்கம், ஜடைமுடிவிரிந்த நிலையில், அகோரமாகக் கத்தும் சூர்ப்பனகை மூக்கறுப்பு வைபவம், இலக்குவனால், இனிதே ?? :-) நடைபெறும் காட்சி! எளிமையான ஆனால், அற்புதமான படைப்பு இது!

2 comments:

Anonymous said...

This is totally different and interesting than the regular ones we see in Thamizmanam. Great work Chandraskaran!

Anonymous said...

//அகோரமாகக் கத்தும் சூர்ப்பனகை மூக்கறுப்பு வைபவம், இலக்குவனால், இனிதே ?? :-) நடைபெறும் காட்சி! எளிமையான ஆனால், அற்புதமான படைப்பு இது!//- well explained!