கொலை
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!
அடக்கம்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்த
அமரரும், அமரராய் அடக்கம்!
அடக்கம் செய்யப்பட்டார்,
அமைதியாய் அமரரானார்!
காலமானார்
அக்காலம், இக்காலம் எதிர்காலம்
எக்காலமாயினும்,என்றும் மாறா
'இறந்த' காலம்; ஒருவர்
போனதும் சொன்னார்- அவர்
"காலம்" ஆனார்!!
09 July 2006
தேன்கூடு-போட்டி: மரணம்- குட்டிக் கவிதைகள்!
Posted by ஜெய. சந்திரசேகரன் at 7:46 AM
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
ஒன்றின் பால்-பலவின் பால் பிழை:
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!
ஒரு மரணத்தால் வந்தன
நான்கு மரணதண்டனைகள்!
வெட்டுப்பட்டன
நான்குபச்சை மட்டைகள்!
இது எப்படி இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன்!பின்னூட்டத்துக்கு நன்றி வாத்தியாரே!!
In spite of gramatical slip it sounds well.Puria neram vendum.
Nandri Chellu. NEram eduthukkondu purinjikittadhukku nandri :)
Post a Comment