வெந்து எரிந்தாலும் வெட்டுகுழி புதைந்தாலும்
வெளிச்சத்துக்கு வந்த உயிர் எத்தனை?
பிறந்து இறந்தாலும் சக்கரம் சுழன்றாலும்
பிறருக்கு செய்த பணி எத்தனை?
பிறப்பைக் கண்டாலும் இறப்பைக் கண்டாலும்
குறிப்பை அறிந்த தலை எத்தனை?
அலைந்து அளந்தாலும் அளந்து அலைந்தாலும்
முதல் முடி கண்டோர் எத்தனை?
அத்தனையும் ஆய்ந்திடுமுன் பித்தனைப் போல்
ஆகும் நிலை கண்டோர் எத்தனை?
மரணமெனும் சொல் கேட்டு கரணமடித் தாடும்
மனம் சரணம் செய்ய இனி
உன்னுள் தேடு; உன்-உள் தேடு இனியிச்
சொல்லை - பின்னால் போடு !
7 comments:
மரபூரார்,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப யோசித்து போட்டிருப்பீர்களோ....
////அத்தனையும் ஆய்ந்திடுமுன் பித்தனைப் போல்
ஆகும் நிலை கண்டோர் எத்தனை?////
இது டாப்.
நன்றி
ஜயராமன்,
// ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப யோசித்து போட்டிருப்பீர்களோ....//
மரணத்தப்பத்தி அவ்வளவு யோசிப்பாங்களா? ;)
இது ஒரே வீச்சில் [இது கூட வெட்ற பாஷைல இருக்கோ? இந்த தலைப்ப வெச்சாலும் வெச்சாங்க, வாயில வார்த்தை இப்படித்தான் வருது :( ] எழுதி முடிச்சது, 10 நிமிடங்களில்..
பின்னூட்டத்துக்கு நன்றி.
நல்ல சொல் விளையாட்டு, ஆனால் கவிதைக்கும் எனக்கும் தூரம். நல்ல முயற்சி, பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொல் விளையாட்டுன்னு சொல்லி, கவிதையை ரசிக்க ஆரம்பிச்சதுக்கு, நன்றி டோண்டு சார்!
As Dondu R has written it is bunch of selected words.Excellent!Very apropriate words!Kudos
M JC.keep writing.I have a doubt.What does it mean by"Maraboor"?Enda Ooru?
Thanks again,Chellu. Maraboor - guess? An imaginary village where I see only people discussing marabukavidhaigal, ilakiyam, art,a rtist and an ideal village where what I want to do thrives! Marabu mikka Oor, Marabulla OOr - Maraboor!
RK Narayanan Pondra Pulikku oru "Malgudi" enraal, indha poonaikku oru "Maraboor".:)
Post a Comment