22 November 2006

அறிவியல்- வி.வ.போ- 3

வி.வ.போ - "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி" - நன்றி கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் பாட்டின் ஆரம்ப வரிகள்!)

சென்னை வலை பதிவாளர் சந்திப்புல இராம.கி ஐயா, "அவங்கவுங்க சுமூகத்துக்கும், வருங்கால சந்ததிக்கும் உருப்படியா ஏதும் எழுத மாட்டீங்களா? காதலும், கவிதையும், கட்டுரையும் எழுத சினிமா, அரசியல்னு அடிதடி செய்ய நிறைய பேர் வருவாங்க. நாமளும் அதைச் செய்யணுமா"னு கேட்டது நியாயமாத்தான் எனக்கு பட்டது.

முந்தி, ஆமணக்குலேர்ந்து எரிபொருள் எண்ணை எடுக்குறதப் பத்தி எழுதுனேன்.
அடுத்து ப்ளாஸ்டிக் எதுக்கு அவசியம்னும் எழுதுனேன்.

ராம.கி ஐயா சொன்ன மாதிரி பின்னூட்டங்கள் அதிகம் இதுக்கெல்லாம் வராதுன்னு தெரிஞ்சும் ஏன் எழுதுறோம்? எப்படியும் செய்திகளால், இன்னிக்கில்லைனாலும், என்னிக்காச்சும் ஒரு கிராமம், நம் தமிழன், நண்பர், வாசிப்பவர், பயன் பெற்றால், என் ஜென்மம் கடைத்தேறும்!!

இந்த கட்டுரையிலயும், எரிபொருள் எண்ணை தரும் ஒரு காயைப் பத்தி பார்ப்போம்!
வழக்கமா, நம்ம ஊர்ல பஸ் ஸ்டாண்டுல பெரிசா நிக்கிற 'புங்க மரம்" எரிபொருள் எண்ணை எடுக்க பயன்படுதுன்னா நீங்க நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும், இந்த உண்மைக் கதைகளைப் படிச்சா!

பெங்களூர்ல இருக்குற மாபெரும் விஞ்ஞான ஆய்வுக் கழகம், IISc. (Indian Institute of Science)
இதுல ஆராய்ச்சி செய்யற பேராசிரியர், உடுப்பி ஸ்ரீனிவாசான்னு பேரு. காடுகளில் எப்படி விஞ்ஞானத்த வளர்க்கலாம்னு போனவருக்கு, மகாராஷ்டிர ஆந்திரா பார்டர்ல இருக்குற ஒரு கிராமத்துல, பெரிய விடிவு கெடச்சது. என்ன?

"ஏன்யா, இன்க கரண்ட் வரணும்னா, என்ன தர முடியும்? தண்ணி ஓடை, இல்ல எதாச்சும் கனிமங்கள் இப்படி ஏதாவது?"

"சோத்துக்கே லாட்டரி. நாங்க ஆதிவாசிங்க. வெளி உலகம் என்னன்னு எங்களுக்குத் தெரியாது. ராத்திரி புங்க மரக் காயி ஏண்ணைல, காடா விளக்கு எரியும். அதான் இங்க காடு முழுச்சும் நிறைய கிடைக்கும். வேற ஒண்ணும் இல்ல," என்றனர் சலிப்பாக.

'காடா வெளிக்கு இந்த எண்ணையில எரிஞ்சா, கட்டாயம், இது எரிபொருளா இருக்கும்' என்று சந்தோஷமாக பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் நினச்சது சரி! அந்த எரிபொருளால, ஒரு ட்ராக்டரே ஓடுச்சு!

சலிப்பைக் களிப்பாக மாற்றியது, புரொபஸர் உடுப்பி ஸ்ரீனிவாசா, அவரது உதவியாளர்கள், நயீம் மற்றும் குழுவினரின் அடாத முயற்சியே! அந்த ஆதிவாசிங்கள்ல, கொஞ்ச பேரை, கர்நாடகாவில இருக்குற ககெனஹல்லி எனும் ஊருக்கு அழைச்சுகிட்டு போயி, அவங்க ஏற்பாடு செஞ்ச "மாதிரி ப்ராஜக்டை"க் காண்பிச்சாரு.

அடுத்த தடவை, உலக வங்கி அதிகாரி இம்மானுவேல் டிசில்வா மற்றும் அங்கிருந்த ஆதிவாசிகள் ஒருங்கிணப்பு வளர்ப்புத் திட்ட செயலாளர் நவீன் மிட்டல் (இவரப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகணும்! நவீன், இந்தியாவின் உயரிய கல்விக்கூடங்களில் ஒன்றான I.I.T யில் தங்க மெடல் வாங்கியவர்! வாங்கின கையோடு அமெரிக்காவுக்கு கம்பி நீட்டாம, நம்ம மக்களுக்கு என்ன செய்யணும்னு, யோசிச்சு, I.A.S படிச்சு, கலெக்டராகி, ஆதிவாசிங்க நலத் திட்டசெயலாளரா விரும்பி வந்தவரு!) ஆகியோரோட, உட்னூர்ங்கிற இடம் வரையிலும் வண்டில வந்து, அதுக்கப்புறம், நயீம் சொல்ற மாதிரி," 30 கிலோமீட்டர் ரோடுங்கிற பேருல, போட்டிருக்கிற கூழாங்கல்லு பாதைதான் எங்களுக்கு மேலே போறதுக்கு வழி! (அட, ஆதிவாசிங்க இருக்குற சால்பார்ட்டி கிராமத்துக்கு!). முடிவேயில்லாம போயிகிட்டிருந்துச்சு.."
அப்படி போனவங்க, மண்டை காஞ்சு போயி, ஒரு வழியா மேல்மட்டத்தை அடைஞ்சு, தலைய நிமிர்ந்தா, அவங்களுக்கு, ஒரு அதிசயம் காத்திருந்துச்சு! ஆமாம்! எங்க பார்த்தாலும், புங்க மரக் கன்னுங்களை நட்டுவெச்சு, வளர்த்துருந்தாங்க அந்த ஆதிவாசிங்க! காத்துல ஆடுற மரக்கன்னுங்களைப் பார்த்து புரபஸருக்கு, சந்தோஷம் தலை கால் புரியல!

2001ல, அப்படியே வளார்ந்த மரங்களோட காய்களை ஆட்டி எண்ணை எடுத்து, ஒரு புது 7.5 Kva கிரிலோஸ்கர் மோட்டர்ல விட்டு, அங்கிருக்கிற குடிசைங்களுக்கெல்லாம் வயரிங் பண்ணி, பல்பு மாட்டி,(சுமார் 5,00,000 செலவு) விளக்கு எறியச் செய்தார்,புரபஸர் ஸ்ரீநிவாசா! அந்த செய்தி, காட்டுத் தீ போல பரவி, இப்ப, கிட்டத்தட்ட ஆந்திராவுல சித்தூர், விஜயநகரம், விசாகபட்டிணம், ப்ரகாசம் ஜில்லா, ஸ்ரீகாகுளம் போன்ற எல்லா இடங்களிலுள்ள கிராமங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள பிஜாபூர், பெல்லாரி, சித்திரதுர்கா மாவட்டங்கள்ல இருக்கிற கிராமங்கள் தவிர, மகாராஷ்டிரத்திலுள்ள இந்த சால்பார்டி கிராமம் தவிர, ஏனைய ஆதிவாசிகள் குடியிருக்கும் மலைகள்லயும், அக்கம்பக்கத்து ஊர்கள்லயும் வேகமா இந்த திட்டம் பரவி,புரட்சி பண்ணிகிட்டிருக்கு! கர்நாடகாவுல ஒரு கிராமத்துக்கு 'பவர்குடா' ன்னே பேரு வெச்சுட்டாங்கன்னா, பார்த்துக்குங்க! (தமிழ்ல ஆரம்பிச்சா, கரண்ட்பட்டின்னு வெச்சா எப்படியிருக்கும்?)

இந்த திட்டத்துல செலவு ரொம்ப கம்மி. மாசம் ஒரு வீட்டுக்கு அஞ்சு ரூபாயும், 300 கிலோ புங்கமரக்காயும் குடுத்துடணும்! அவ்வளாவுதான், சாயந்திரம் 6 மணிலேர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கரண்ட் கிடைக்கும்! இதனால பலருக்கு புது வேலைவாய்ப்புகள், படிப்பு கிடைச்சிருக்கு!

நிறைய பேரு, எண்ணை ஆட்டற ஆலை வெச்சு காசு சம்பாதிக்கிறாங்க. நிறைய ஆதிவாசி இளைஞர்கள் அந்த ஜெனரேட்டர், பம்ப் ரிப்பேர் செய்ய கத்துகிட்டாங்க. சிலர் அந்த புங்க மரக்காய் எண்ணை எடுத்த புண்ணாக்க இயற்கை உரமா பொடி பண்ணி காய வெச்சு, வியாபாரம் பண்றாங்க; பசங்க நிறைய பேரு ராத்திரி படிச்சு காலேஜுகள்ல காலடி எடுத்து வெச்சுருக்காங்க!

இன்னும் சில தொழிற்சாலைகள், இந்த எண்ணைய வாங்கி, அவங்களோட டீசல் பம்ப் செட்டுக்கு உபயோகிச்சுக்கறாங்க!

ரயில்வே நிர்வாகம், எங்கல்லாம் நிலங்கள் இருக்கோ, அங்கல்லாம் ஜாத்ரோபாவும்,புங்க மரங்களும் நட்டு வெச்சு, அவுங்களும் டீசல் இஞ்சின்ல இந்த இயற்கை எண்ணைய உபயோகப்படுத்த ஆரம்பிச்சுருக்காங்க!

தரிசு நில விவசாயிங்க, ஏனைய பலர் இந்த பயிர்களை (ஜாத்ரோபா, புங்க மரம்) ஊடு பயிராவோ, வயல் கரைகளிலோ நட்டு, எண்ணை வித்துக்களை வித்து [பார்றா, சிலேடையா வருது :-) ] காசு பார்க்கலாம்.

நாட்ல இருக்குற எரிபொருள் எண்ணை பற்றாக்குறையும் குறையும், விவசாயிங்களுக்கு கரண்டும் குறைஞ்ச செலவுல கிடைக்கும், நாலு காசும் புழங்கும். என்ன விஞ்ஞானத்தால் பலன் அடைஞ்ச இந்த நிஜக்கதையும் உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்குதா?மேல தகவல் தெரிஞ்சுக்கணும்னா, தொடர்பு கொள்ள:

புரொ. உடுப்பி ஸ்ரீநிவாசா,Dept.of Mechanical EnggIndian Institute of ScienceBangalore 560012மின்னஞ்சல்: udipi@mecheng.iisc.ernet.in மற்றும் திரு.A.R.Nayeem [nayeem@mecheng.iisc.ernet.in]தொலைபேசி: 91-80-23566617,23566618,51281736மொபைல்: 9342129295

===========================================================================
more positive stories from www.goodnewsindia.com

10 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

எங்கேயோ ஒரு தீபம் யாராலோ ஏற்றப்பட்டுக்கொண்டுதான் உள்ளது..
தகவலுக்கு நன்றி.

Maraboor J Chandrasekaran said...

வருகைக்கு நன்றி சிவஞானம்ஜி. இதுவே, விஞ்ஞானத்தைத் தமிழ் படுத்தும் எங்களைப் போன்றவர்களுக்கு உற்சாக டானிக்.

Anonymous said...

i dont understand all of this but it's really beauty writing ;)

Maraboor J Chandrasekaran said...

அனானி, நிர்மல், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி. அனானி, என்ன புரியல? புங்க மரக் காய்களை செக்குல ஆட்டி எண்ணை எடுத்து இஞ்சின்ல ஊத்தி ஓட்டுறாங்க. இதுக்கு ஆங்கிலத்துல SVO னு பேரு. Straight Vegetable Oil. மேக்டொனால்டு ரெஸ்டாரண்ட் காரங்க, அப்பளம் வடை சுட்ட எண்ணையையே அவங்க டெலிவரி வண்டிங்களுக்கு எரிபொருளா உபயோகிக்கறதா கேள்வி! தாய்மார்களே, வீட்ல பழைய மொபெட் ஏதும் இருந்தா, கொஞ்சம், ஆறின சுட்ட எண்ணைய ஊத்தி ஓட்டிப் பார்க்கலாம். [ஓடினா, ரைட்; இல்லைன்னா, என்னை அடிக்க வராதீங்க :-)]

Deepa said...

CS..how about u r vehicle..?..

Mrs.CS..neenga sollunga
Deepa

Maraboor J Chandrasekaran said...

தீபா, பொண்டாட்டி சொல்றதக் கேப்பேன்னு கரெக்டா எப்படி கண்டுபிடிச்சீங்க? :-) புங்க மரம், சென்னையில? 30 கிலோ அதுவும்? இல்லா, 10 லிட்டர் சுட்ட எண்ணைய். அப்ப, எவ்வளவு அப்பளம் வாங்கணும்? ஆத்தா, நான் எங்க போவேன்? சரி, என் வண்டி பழைய வண்டின்னு எப்படி சொல்றீங்க? :#(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது போன்ற நாட்டுல நடக்கிற நல்லது பற்றி படிக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

மரபூரார்,

நல்ல தகவல்கள், இது போல் பல உத்திகளின் மூலம் நாம் ஓரளவாவது எரிபொருள் தன்னிறைவு அடைவோமானால் அது உண்மையிலேயே நல்ல விஷயம்தான்.

எனக்கு இரண்டு கேள்விகள்.

1) இதன் தயாரிப்பு செலவு எவ்வளவு? பாரம்பரிய எரிபொருளின் விலைக்கே கிடைக்குமா? இதற்காக எஞ்சின்களில் எதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?

2) இது கொஞ்சம் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். இன்று பல நாடுகளில் அந்நாடுகளின் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை நவீனப்படுத்துகிறோன் என மாற்றி விடக் கூடாது என்று அவர்களை அதிகம் தொந்தரவு செய்யாமல் தனித்தே விடுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இங்கு பழங்குடியினரின் வாழ்க்கை முறையை நாம் மாற்றலாமா? (நான் வெறும் தகவலுக்கு மட்டுமே கேட்கிறேன்.)

Deepa said...

எல்லாம் ஒரு யூகம் தான்...வீட்டுக்கு வீடு வாசப்படி

Maraboor J Chandrasekaran said...

லஷ்மி, ஆமாம். நான் குடுத்த ல் இது போன்ற சந்தோஷங்கள் ஏராளம். வருகைக்கு நன்றி.
---------------------------------
இலவசக் கொத்தனார்- முதலீடு 5 லட்சம், எனக் கேள்விப்பட்டேன். இஞ்சினில் எந்த மாறுதலும் கிடையாது. கிர்லோஸ்கர் கம்பெனி இதற்கென்றே ப்ரத்யேகமாக மோட்டார் தயாரிக்கிறார்கள்.

அடுத்த கேள்வி. மின்சாரம் வருவதும், விளக்கு எறிவதும் அந்த ஆதிவாசிகள் விரும்பியதால்தானே, இன்று ஏறத்தாழ 400 கிராமங்கள் அங்கே இந்த முறையை பின்பற்றியுள்ளனர்? அவர்களில் சிலர் எண்ணை ஆட்டும் ஆலைகளையும் நடத்திவருகிறார். அதில் ஒரு ஆதிவாசிப் பெண்மணியும் ஆலை அதிபராக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறார்.

இது தவிர, வளரும் நாடுகள் கார்பன் சேவிங் பாயின்ட்ஸ் என க்யூடோ மாநாட்டில் ஏகமாகச் சேர்த்துள்ளன. அது என்ன கார்பன் பாயின்ட்ஸ்? (புள்ளிகள்). எந்த நாடு அதிகமாக கார்பன் வெளியிடுதலை குறாஇக்கிறதோ, அதற்கு,அதிக புள்ளிகள். எந்த நாடு அதிக புள்ளி வைத்திருக்கிறதோ, அந்த நாட்டிற்கு, உலகவங்கி, மேபாட்டுத்திட்டத்தின் கீழ் அதிக வட்டியில்லா கடன் கிடைக்கும். என்வே, அதிக நிலமற்ற சிறிய நாடுகள் தங்களால் முடிந்தவரை மாசு கட்டுப்பாடு செய்தும், மேலும் உதவி பெற, ம்ற்ற நாடுகளின் புள்ளிகளை விலை குடுத்து வாங்குகிறது. அந்த விலையால், ஒரு கிராமமே, செப்பனிடப்படுகிறது. என்வே, எல்லா அரசாங்கங்களும் இந்த முறையை அனுமதித்துள்ளன! கர்நாடகத்தில், மிக அதிகமான கிராமங்கள் தங்கள் புள்ளிகளை விற்று, அதிக அந்நிய செலவாணியை ஈட்டுள்ளன! அப்ப நமக்கு பாயின்ட்ன்னு கேக்குறீங்களா? நாம மொத்த இந்தியாவையும் க்யோடோ மாநாட்டில் விதித்துள்ள விகிதாசாரப்படி மாற்றினால், இன்னும் 100 ஐந்தாண்டுத்திட்டம் தீட்டுமளவுக்கு பணம் வரும்!! அரசாங்கம்தான் கண் விழித்துக்கொள்ளவேண்டும்!