22 February 2006

மூளை வரட்சி!!


படிச்சா கம்ப்யூட்டர், இல்லைன்னா இல்ல!
இது தான் இன்னிக்கி பசங்க கிட்ட நாம கேட்குறது!
மத்த பொறியியல் பாடங்களான கட்டடக் கலை, மின்னியல், மெகானிகல், இதெல்லாம் கேக்க நாதியில்லாம் இருக்கு.அப்படி எடுத்துப் படிச்சாலும், ஒரு இஞ்சினியர் பட்டம் வாங்கதான் அத உபயோகப்படுத்தறாங்களே தவிர, மேற்கொண்டு, பழைய குருடி கதவத் திறடின்னு, அவுங்களும் கணிணி படிச்சுட்டு, அந்தப் பக்கம் தாவீர்றாங்க!

எத்தனையோ தொழில்கள்ல நாம முதலீடு செஞ்சாலும், ஆள் பற்றாக்குறை இருந்துகிட்டே தான் இருக்கு. ஒரு CNC ஆப்பரேட்டரோ, நல்ல வடிவமைப்பாளாரோ, மூலப் பொருட்களை ஆராயற Material Science பொறியாளரோ குறைஞ்சுகிட்டே வராங்கறது தான் உண்மை. கார் கம்பெனிகள், துணிகள் ஏற்றுமதி நிறுவனம் எல்லாத்துலயும் மேல் பதவிகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்கு.இத சரி செய்ய என்ன வழி?
பலதரப் பட்ட தொழில் இயக்குநர்கள் சேர்ந்து, கணிணி கம்பெனிகள் நடத்துற மாதிரி எல்லா ஊர்லயும் வேலை சேர்ப்பு விழா நடத்தணும். நல்ல சம்பளத்தைத் தரணும். வேலைக்குச் சேரும்போதே, ரொம்ப காலம் வேலைல இருந்தா, என்னன்ன வசதிகள், பதவி ஏற்றம், பண ஏற்றம் கிடைக்கும்னு ஒரு வருங்கால அட்டவணையே கொடுக்கலாம்!!

I.I.T ல ஆண்டொண்ணுக்கு ஒரு மாணவனுக்கு அரசாங்கத்துலேர்ந்து சராசரியா ரெண்டேகால் லட்சம் செலவு செய்யறாங்க! அந்தக் கணக்குல பார்த்தா, எத்தன IIT காரங்க, வெளிநாட்டுக்குப் போய்ட்டு திரும்ப வரதில்ல? கேட்டா, "இங்க வசதி குறைச்சல்" ன்னு சொல்றாங்க! ஆமாங்கய்யா,கோவணத்துக்கே வழியில்லாத குப்பனும் சுப்பனும் வாடுற ஏழை நாடு, உனக்குன்னு, உன் தனி அறிவை நம்பி, ஒரு முதலீடாதான் அந்த பணத்தை செலவு செஞ்சது.

உனக்குன்னு இருக்குற அந்த "சிறப்பு மூளையை" வெச்சு, ஏம்பா, அந்த வசதிங்களை நீயே ஏற்படுத்திக்கக் கூடாது? உன்னாத்தா நீ கிழிஞ்ச டவுசர் போட்டு பள்ளிக்கூடம் போகக்கூடாதுன்னு, தான் ஒத்தச் சேலைல இருந்து கிட்டு உனக்கு புது டவுசர் வாங்கினா.
நீ பெரியவனானதும், அடுத்த வீட்டு ஆன்டி ஆப்பிளும், அமுதும் வெக்கிறான்னு அங்க போயி வசிப்பயா, இல்ல ஆத்தாள உன் பக்கத்துல வெச்சுக்குவயா?

அரசாங்கத் தரப்புலேர்ந்து ஒண்ணு செய்யலாம். கட்டாய பணி புரியும் ஆண்டுகளை இந்த IIT, மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் மீது திணிக்கலாம்; தப்பேயில்ல! இந்த நாட்டுக்கு குறைஞ்சது 10 வருஷம் வேல செய்யணும். ஒண்ணு, முதல் பத்து வருஷம். இல்ல 40 வயதுக்குள் எதேனும் 10 வருஷம். (ஒரு வேளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தா, அத அவங்க ஏத்துக்க தோதா! எப்படியாச்சும் அக்ரீமண்ட் இருக்குல்ல? அதனால 40 வயசு முடியறதுக்குள்ளே, வந்து வேல செய்வாங்க! ) இல்லன்னா,பாஸ்போர்ட் ரத்துன்னு சொல்லணும்.

"ஸ்வதேஷ்" னு ஒரு நல்ல படம். லகான் டைரக்டர் அசுடோஷ் கவுரிகர் எடுத்தது!

அதுல ஒரு நல்ல செய்திய அந்த கதநாயகன் சொல்றான்! அவன் கஷ்டப்பட்டு படிச்சு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA வுல ஒரு பெரிய விஞ்ஞானி ஆயிர்றான். அவன் வளர்த்த ஆசிரம அம்மாவை கூட அழைச்சுகிட்டு போகணும்னு இந்தியா வர்றான். அங்கே, அவனுக்கு அதிர்ச்சி காத்துருக்கு. அந்த அம்மாவைக் காணோம்! விசாரிச்சா, யாரோ ஒரு பொண்ணு கூட வெச்சுக்க கூப்டுகிட்டு போனதா கேள்விப்பட்டு, இவனும் அந்த பாதையில் பயணப்படறான். ஒரு வழியா அந்த கிராமத்துக்குப் போனால், தன்னுடன் படித்த பெண்ணே, நன்றி மறக்காம, அம்மாவ வெச்சு காப்பாத்துறதப் பார்க்குறான்! எப்படியும் அம்மாவக் கூட அழைச்சுகிட்டு போணும்கிற அந்த பிடிவாதம் ஒரு பக்கம்; அந்த பொண்ணு ஒரு பள்ளிக்கூடம் வெச்சு நடத்துது. அதுல ஜாதிப் ப்ரிச்னைனால பசங்க யாரும் ஒண்ணா படிக்க வரல. பஞ்சாயத்தோ, "பள்ளிக் கூடம்லாம் சரிப்பட்டு வராது. சொன்ன தேதிக்குள்ளாற 50 பசங்க சேக்கலைன்னா, திரும்ப கட்டிடத்த பஞ்சாயத்தே எடுத்துக்கும்னு" கண்டிஷனா சொல்லிர்றாங்க! அந்த கெடுக்குள்ள பிள்ளைங்கள ஒண்ணு சேர்க்க பாடு படும் அந்த பொண்ணுக்குப் பரிஞ்சு, இவனும் களத்துல (கொஞ்சம் பொதுநலமும், சுய அறிவும் இருக்குற ஊர்க்காரங்க ரெண்டு பேர் கூட உதவிக்கு வர) இறங்குறான்!! இன்னொரு பக்கம், பஞ்சம். எட்டு தூரத்துல மலைச்சுனை இருந்தும், தண்ணியில்லாப் பஞ்சம்! அத வழிக்குக் கொண்டுவந்து, பாத்தி வெட்டி, நீர் பாய்ச்சி,பெரிய பைப்புங்கள்ல தண்ணியக் கொண்டுவந்து, ஒரு சேமிப்பு கடங்குல வெச்சு, அருவியா விழவெச்சு, Hydro electricity எனும் நீர்வழி மின்சாரம் தயாரிக்க தனது படித்த அறிவையெல்லாம் உப்யோகித்து, ஊர்காரங்க மனசுல இடம் பிடிக்கிறான், கதாநாயகன்! இத்தனை ப்ரச்னைகள் அவன் மனசுல ஒரு ரசாயன மாற்றத்தைக் கொண்டு வருது! இன்னொரு பக்கம், அமெரிக்க வாழ் உடன் படித்த நண்பன் மூலமா, NASA வுல நடக்குற வேலைகளையும் அவ்வப்போது கவனிச்சுக்கறான். கடைசியா, அவனுக்கு NASA காரங்க, ராக்கெட் ஏவுற அன்னிக்கி கட்டாயம் அங்க வந்துரணும்னு கண்டிஷன் போட்டுர்றாங்க! கதாநாயகன், அங்கு போய், அந்த ராக்கெட் வேலைய, ராப்பகல் உழச்சு, வெற்றிகரமா, ஏவுறான்! அவனுக்கு பல பெரிய பதவிங்க, பணப் பரிசு காத்திருக்கு. அவனோ, தனது பாஸ்கிட்ட," என் வேல எது, எதுல எனக்குக் கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் கிடைக்குமோ, அங்கே நான் போகிறேன்"னு சொல்லிட்டு திரும்ப கிராமத்துக்கு வந்துர்றான்!! அது தான் கதை!

அதுல, எத்தன செய்திங்க?

முதல் செய்தி- வெறும் வாய் மெல்ற இளைஞர்களுக்கு சவுக்கடி. இவன் சும்மா தண்ணி அடிச்சுட்டு, ஊரச் சுத்திட்டு, கவர்மெண்டத் திட்ட வேண்டியது. நீ உருபட்டியா? படிச்சயா? எதானும் வேல செஞ்சயா,இல்ல செய்ய முற்பட்டியா?

அடுத்த செய்தி- கொடுக்கற வசதி வரணும்னா, அதுக்கு அடிப்படைக் கல்வி- எம்மொழியாயினும், எவ்வழியாயினும் கல்வியைக் கற்பவனுக்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பு வரத்தான் செய்யும்! நல்லா சம்பாதி, அப்புறம் கொடுக்கறதப் பத்திப் பேசு!

மூணாவது செய்தி - கல்; வெளிநாடு போ; பொருள் சேர்,உனக்கும் உன் நாட்டுக்கும் பெருமை சேர்; கடமையிலிருந்து தவறாதே! (எண்ணித்துணிக கருமம்..) அப்புறம் திரும்பி வந்து நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்.

இந்த படத்து கதாநாயகன், மேல சொன்ன மூணையும் செய்யறான், அதனால நம் மனசுலயும் இடம் பிடிக்கிறான்!

அவன், விஞ்ஞானி ஆயிட்டு, இங்க வந்து அது இல்ல, இது இல்லன்னு சொல்லாம, இருக்குற ஊரணி, கிடைக்கிற பைப்பு, மோட்டார், வயர், இத வெச்சே, நீர் பாசன வசதிய ஊருக்கு செய்றான். எது மக்களுக்குத் தேவையோ, அதை குறிப்பறிந்து செய்யறான். "நான் செஞ்சா ராக்கெட்தான் செய்வேன்"னு சொல்லல!


அதுதான் மாணவர்களுக்கும், நம் இளைய தலைமுறைக்கும் நாம சொல்லணும். படி; படிப்படியா மேல போ, பிடி. பதவியப் பிடி. பிடிச்சப்புறம், பழைய படியையும், படிப்பையும், பிடிப்பையும் விட்டுடாத!

11 comments:

நன்மனம் said...

good discussion and nice presentation. Even though this type of discussion is not new, keeping the fire without extinguising is more important to achieve results over a period.

Maraboor J Chandrasekaran said...

Thanks Sridhar. Neenga Azbieksthan (spelling thappunnu ninaikireyn, mannikkavum) la enna panreenga! Unga accounts moolai namma oorlayum thevai paduthu. Seekiram, tirai kadaloadi thiraviyam thedi, serthukittu, nammoorukku odi vandhudunga! Idu enadhu anbaana viNNappam.
Nandri
Maraboor JC

நன்மனம் said...

Maraboor sir, athu Azerbaijan, Inga vanthu 7 maasam thaan aaguthu, viraivil thayagam thirumbi nalathu pannanumnu nenaipiruku, atharku sakthiyayum, manathaiyum kuduka iraivanai prarthanai seikiren.

By the by if you have time visit my blog http://narpeyar.blogspot.com and let me know your comments.

You will be the first visitor to this site.

Maraboor J Chandrasekaran said...

Nallathu ninaipom, nalamaey malarga. Thangal sindanaikku en vanakkangal.

Anonymous said...

I read your blog post "மூளை வரட்சி!!". There you noted that there is
a general neglect about various technological and scientific fields,
other than IT. I suspect one of the reasons is that students are just
not aware of the range of technological fields available. Although,
there are various English sources, their focus (in terms of
institutional resources etc) is not always relevant to a Tamil
audience. One good, simple, and effective mechanism to overcome this
lack of awareness is Tamil Wikipedia.

I Natkeeran, and a contributor to Tamil Wikipedia. In Tamil
Wikipedia(www.ta.wikipedia.org), we try to highlight the various
scientific and technical fields. If you have time, your contribution
to Tamil Wikipedia on topics of your expertise (Plastics Technologies)
or any other field that you may feel appropriate would be welcomed.

Maraboor J Chandrasekaran said...

Nandri Natkeeran! Neyram kidaiththaal kattaayam ezuthukireyn!

Karthik Jayanth said...

பாஸு,

மத்த டெக்னாலஜி எல்லாம் ஆரும் பட்டிக்கலனு சொல்லுறிங்க கரெக்ட்தான். ஆனால் பணம்தான் பிரதானம் என்ற இந்த உலகில் இந்த வாதம் எந்த அளவுக்கு நிக்குமுன்னு எனக்கு தெரியல. என்னோட நண்பர்களில்[other fields] இந்த IT கு வர்ர வழிய கேக்குறாங்க.எல்லாம் "peer pressure" ஆனா IT எல்லாருக்கும் வாழ்வு அளிப்பதாகவும் தெரியல.இவ்வளவு எதுக்கு எங்க வீட்லயே ஒரு 6 வருசம் கழிச்சி நான் இந்தியா வரேன்னு சொன்ன வேணமுன்னுதான் சொல்லுராங்க.

என்ன கேட்டா அவன்னே நினச்சி தாய் நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்யனுமுண்ணு செய்யனும்.[may be initially u can enforce with law] வெளிநாடு / ஊர் என்பது வனவாசம். ஒவ்வருத்தனும் அவனோட 50 வயதுக்கு மேல் அவனுடைய சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு உழைத்தாலே போதும்.

Maraboor J Chandrasekaran said...

அன்பர் கார்த்திக்,

மற்ற துறைகள் சிறக்க வில்லையென்றால், ஒரு அப்துல் கலாமோ, இல்லை ஒரு கல்பனா சாவ்லாவோ, இல்லை பையோடெக்னாலஜி துறையைச் சேர்ந்த கிரண் முஜும்தாரோ, நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.

அதே போல், நல்ல வாத்தியார் நமக்கு இப்பல்லாம் பார்க்கறதே, அபூர்வமாயிருக்கு! மெடிகல் கிடைக்கலையா, ஒரு பொறியியல் படி. அதுவும் இல்லையா, அக்கவுண்ட்ஸ்; அதுவும் போச்சா, சரி, வக்கீலுக்குப் படி (அப்பதான BA BL போட்டுகிட்டு, எதேனும், வட்டம் மாவட்டம்னு ஆயிடலாம்!!) அதுவும் கெட்டதுன்னா குட்டிச்சுவர்- அதாவது வாத்தியார் வேல! இப்படி போகுது ஒரு பக்கம்! இந்த வாத்தியாரெல்லாம் சொல்லிக்கொடுத்து, பயலுகளுக்கு விளங்கி,.. ஹ¥ம்,என்னத்தச் சொல்ல?

மத்தபடி, நீங்க சொன்னமாதிரி, 50 வயசுக்கு அப்புறம்தான் நாம நாட்டுக்கு உழைக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்! யோசிச்சுப் பாருங்க; முதல்ல வயசு கேட்காது, உடம்பு கேட்காது; கேட்டாலும், காது கேட்காது; கேட்டாலும், நம்ம பைய கேட்கமாட்டான் (நல்ல பையன வளர்த்தேங்கன்னே வெச்சுக்கங்க!) - "வேணாம்பா, இந்த வயசுல உங்களுக்கு ஏம்ப்பா பொது சேவைல்லாம்!" அப்படீம்பான்! ஆங்கிலத்தில் சொல்வார்களே - Priorities will change!
அதுனால, எது செய்யணும்னு நினைச்சாலும், "அன்றே செய், அதை நன்றே செய்" ங்கறதுதான் பெரியவங்க வாக்கு! இல்லன்னா, மனுச மனசு இருக்கே, அது ஒரு குரங்கு மாதிரி! மனசு மாறிடும்!!
உங்க ஆக்கபூர்வமான வாதங்களுக்கு நன்றி.
மரபூர் ஜெய.சந்திரசேகரன்

Karthik Jayanth said...

மத்த துறைகள் எல்லாம் சிறக்க வில்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது மத்த துறைகளில் நல்ல எதிகாலம் இல்லை என்பது போன்ற மாயை இருக்கிறது,அதைத்தான் சொல்லவந்தேன்.

மத்தபடி என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு 100 அப்துல் கலாம், கிரண் முஜும்தார் தேவை. இந்த விசயத்தில் கொஞ்சம் பேராசைதான் :-)

50 வயதில் தான் கடமைகளில் இருந்து விலகி இருக்கமுடியும். அந்த வயதில் என்னால் ஒரு 10 பேருக்காவது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க முடித்தால், எனக்கு கொஞ்சம் சந்தோசம் தான்.remember u r daughter / son also share the same thoughts. நல்ல பொண்ணு /பையன வளர்த்தேங்கன்னே வெச்சிகிட்டேன் :-)

மத்தபடி வாத்தியார் பத்தி உங்கள் கருத்தோடு உடன்பாடுதான் எனக்கும்.

இதை வாதம் என்று சொல்லவேணாம்.இங்கு பல நல்ல கருத்து பரிமாற்றம் திசை மாறி .. என்னத்தை சொல்ல

தங்களின் கருத்துக்கு நன்றி.

Maraboor J Chandrasekaran said...

கார்த்திக் ஜெயந்த்,
எனது, உங்கள் கருத்துக்கள், வாதங்கள் எல்லாமே, இந்தப் பதிவைப் படிக்கும் அனைவருக்கும், ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, [எனக்கு மட்டும் பேராசை இருக்கக் கூடாதா என்ன? ;-) ] அதில் ஒரிருவரேனும் தாய்நாட்டுக்கு எதேனும் ஆவன செய்தால், எனக்கும் மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.