21 July 2006

கோவில்கள் மறையும் அபாயம்! - 2

http://www.pkblogs.com/maraboorjc/2006_04_02_maraboorjc_archive.html

எனும் வலைத்தளத்தில் ( என்ன செய்ய சுற்றி வளைத்து மூக்கைத் தொடுமாறு நமது முட்டாள் அரசாங்கம் நம்மை பாடாய் படுத்துகிறது! 18 குறிப்பிட்ட வலை தளைத்தை தடை செய்வதற்கு பதில், எல்லா ப்ளாக்ஸ்பாட் வலைத்தளங்களையும் ப்ளாக் அவுட் (Black-out) செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!! ) .. விஷயத்துக்கு வருகிறேன்..
மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கோயில்கள் மறையும் அபாயத்தைப்பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டத்தில், 'குன்றத்தூரான்' என்ற பெயரில், ஒருவர் எங்கள் குழு செய்யும் உழவாரப் பணியை கேலி செய்து பேசினார்). அனாமதேயமாக, தனது தொலைப் பேசி எண், மின்னஞ்சல் ஏதும் தராமல், அவர் குறிப்பிட்ட நவக்ரஹஸ்தலங்களை எங்கள் R.E.A.C.H குழு பார்வையிட்டு வந்தது. 'குன்றத்தூரான்' குறிப்பிட்ட கோவூர் சிவாச்சாரியாரான தியாகராஜனின் ஒத்திழைப்போடு எல்லா கோவில்களையும் பார்வையிட்டோம். அவர் கூறியதுபோல், எந்த கோயிலும் 'கேட்பாரற்று கிடக்க'வில்லை!! மாறாக, ஒரே ஒரு கோயிலைத்தவிர (கெருகம்பாக்கம்) மற்றவை நன்றாகவே இருந்தது. மக்கள் வராததற்குக் காரணம், சரியான விளம்பரம் இல்லாததே!
எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் அக்கோவில்களை பார்த்துவிட்டு வந்த மறுவாரமே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைவரான திரு. இறையன்பு IAS (என்ன பெயர் பொருத்தம்!!) ப்ல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்து, ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எங்கள் R.E.A.C.H குழுவின் தலைவரான, முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக திரு.டாக்டர்.டி.சத்யமூர்த்தி ஒரு பவர் பாயிண்ட் விளக்கவுரை அளித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் செயலர் (இறையன்பு அவர்கள்) மற்றும் ஏனைய பெருந்தலைகள் அங்கே அமர்ந்திருக்க, அவ்விளக்கவுரையில் நமது சென்னையைச் சுற்றியுள்ள நவக்ரஹக்கோவில்களின் படங்களும், விளக்கவுரையும் இடம் பெற்றிருந்தன. மறு வாரமே, சுற்றலாத்துறையைச் சேர்ந்த அதிகாரி ராஜசேகர் அவர்கள், நம்முடன் தொடர்பு கொண்டு அக்கோவில்களை பற்றிய விபரங்களையும், போகும் வழிகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டு, ஏனைய அதிகாரிகளுடன் சுற்றிப்பர்ர்த்து வந்து, அத்தலங்களை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கச் செய்தார். நேற்றைய தினகரம், மதுர்ம் இன்றைய இந்து நாளிதழ்களில் சுற்றலாத் துறையின் சிறப்பு அறிவிப்பில், நபர் ஒருவருக்கு ரூ.150 பெற்றுக்கொண்டு, தமிழக சுற்றலாத்துறையே, இந்நவகிரஹக் கோவில்களை சுற்றிக்காட்ட ஏற்பாடு செதுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் வரவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள் பிரசாத, பூசைக்குரிய பொருட்கள் விற்று சுய தொழில் புரிய முனைவர்; அதனால் பணப் புழக்கம் மற்றும் கோவில்களின் நிலைமை சேரமையும் என நம்புவோம். சுற்றலாத்துறை காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஏனைய துறைகளான இந்து அறநிலையத்துறையும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் காட்டினால், சிகப்பு நாடாக்கள் அவிழ்க்கப் பட்டு, கோவில்களில் பூசைகள் தினந்§தோறும் நடைபெறும்; இக்கோவில்களிலிருந்து காணாமல் போகும் கல்வெட்டுச்செய்திகள் உலகெங்கும் அறிய வரும். எல்லாரும் சேர்ந்து இப்பணையை செய்வார்களா?
நீங்களும் இந்த நவக்ரஹ தலங்களை பார்க்க ஆவலாக உள்ளீர்களா? பயணிக்கவும் :-

http://puggy.symonds.net/~madan/navagraha/tour.html

இந்த வலைத்தளத்தில் உள்ள சிகப்புப் புள்ளிகளை சுட்டினால், உங்களை அந்தந்த ஸ்தலங்களுக்கே கொண்டு போகும்!

இப்போதைக்கு எந்த பதிவையும் படிக்க இயலாதவர்கள் மூக்கைச் சுற்றி pkblogs மூலம் முயலலாம்!

2 comments:

Anonymous said...

திரு சந்திரமோகன் அவர்களுக்கு நீங்கள் சொன்னது உண்மை. இந்த சுற்றுலாவை ஆரம்பிக்கும் முன் களப்பணிக்காக பணியாற்றும் வாய்ப்பு நமக்கு கிட்டியது. 9 ஆலயங்களுக்குன் சென்று வந்தோம். அதிலும் கெருகம்பாக்கம் கொஞ்சம் கவனிப்பு தேவைப் படுகிறது.

வளர்க பணி

Maraboor J Chandrasekaran said...

நன்றி, மன்னைகோசை (பெயர் காரணம் என்னவோ?) களப்பணி என்று சொன்னீர்கள். நல்லது. சென்னைவாசியானால், எங்கள் temple_cleaners yahoo groupல் சேர்ந்து, சேர்ந்து தொண்டாற்றலாம். மற்ற ஊர்க்காரரானால், ஊரில் உள்ள பாழடைந்த கோவில்களைப்பற்றி இந்த group databaseல் சேர்ப்பித்து தகவல்கள் தந்தால், அங்குள்ள இளைஞர்கள் குழு மூலம், அந்தந்தக் கோவில்களிலும், உழவாரப் பணியை, கட்டுமானப் பணியை நாம் ஆரம்பிக்கலாமே!