
பம்பரம் வலைல சரியா சுத்தமாட்டேங்குது! இதுவும் காணாமல் போயி, பின்னுட்டங்களும் வருகின்றன. ப்ளாகரில்தான் இதைக் காணோம்! மறுபடியும், மறுபடியும் பதிகிறேன்! பார்க்கலாம், எனக்கு, ப்ளாக்கருக்கும் ஒத்திக்கு, ஒத்தி!
கட்டை கடைந்து கடைந்து
பொட்டில் ஆணி அரைந்து
கயிற்றில் சுடக்கி சுழற்றி
ஆடும் பம்பரமே!
சுற்றும் வரை சுற்று.
சுழல் எழல் கழலுமுன்.
கோடுகள், புள்ளிகள், உடலின் நிறங்கள்
யாவும் மறைந்துவிடும்!
ஆடிடும் வேளையில் சுற்றும் முற்றும்
யாவும் மறந்துவிடும்!
உருவும் போயி மருவும் போயி
அருவம் ஆகிவிடும்!
சுழலும் நேரம் உன்னால் எதையும்
அளவாய் பார்க்க முடியாது
சுற்றம் சூழல் சுற்றி நின்றாலும்
சூழ்நிலை உனக்கு பழகாது!
ஆடிடும் ஆட்டம் ஈர்ப்பிலிணங்கி
அடங்கிடும் வரையில் சுற்றிவிடு
சுற்று(ம்)முன் பார்வை நிலைத்திட
கூர்வை,சீர்-வை,நேர்-வை!
3/4/2006 காலைல பதிச்சு, காணாமல் போன பம்பரம் :-
http://maraboorjc.blogspot.com/2006/04/3.html
9 comments:
சுற்றும் போது ஆட்டம் இல்லா சுழற்சி
நிற்கும் போது சுழலின் இர்ப்புக்கு மெல்ல ஆட பின்பு தடதடத்து விழும்.
பட்டணத்து ராசா,
சரியாச் சொன்னீங்க. அந்த சுழ்றசி ஒரு நாள் நிற்கும்கிறது மனுசனுங்களுக்கு பாடம் சொல்றதுதான் நம்ம அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்.!!
புதிய பார்வை. நல்ல முயற்சி.. பம்பரத்தின் point of view வில் இருந்து பார்க்க வேணும் என்று ஏனோ தோன்றியதே இல்லை..
மற்ற அஃறிணை பொருட்களின் பாடத்திற்கும் காத்திருக்கிறேன்..
என்ன சொல்லவர்றீங்க. பம்பரக் (மதிமுக) காரங்க தகராறுக்கு வரப்போறாங்க. தேர்தல் நேரமில்ல எச்சரிக்கையா இருங்க. பம்பரம், மாங்கா, இலை, சூரியன்னு கவிதை எழுதி மாட்டிக்காதீங்க :-)) எளிமையா எனக்கும் புரியும்படி இருக்கு.
என்ன சொல்லவர்றீங்க. பம்பரக் (மதிமுக) காரங்க தகராறுக்கு வரப்போறாங்க. தேர்தல் நேரமில்ல எச்சரிக்கையா இருங்க. பம்பரம், மாங்கா, இலை, சூரியன்னு கவிதை எழுதி மாட்டிக்காதீங்க :-)) எளிமையா எனக்கும் புரியும்படி இருக்கு.
பொன்ஸ்- பம்பரத்தின் பார்வையை- "பம்பரக் கண்ணாலே" ன்னு கூப்பிடலாமா? மத்த அக்றிணைப் பாடங்கள் இதோ:-
http://maraboorjc.blogspot.com/2006/04/6.html
http://maraboorjc.blogspot.com/2006/04/2.html
http://maraboorjc.blogspot.com/2005_10_16_maraboorjc_archive.html
http://maraboorjc.blogspot.com/2006/01/6.html
http://maraboorjc.blogspot.com/2005/12/5.html
http://maraboorjc.blogspot.com/2005/10/4.html
http://maraboorjc.blogspot.com/2005/10/1.html
இதெல்லாம் பாடஞ்சொல்லியும் மனுஷப்பயலுவ திருந்தினாச் சரிதான்!
குறும்பன் - பேருக்கேத்த மாதிரி குறும்பு பண்ணாதய்யா. நான் இத எழுதினது, போன் அக்டோபர்ல; ப்ளாகர் செஞ்ச சதில அது மறைஞ்சு போச்சு! மதி கிட்ட கேட்டப்ப, அவங்கதான், மீண்டும் பதியச் சொன்னாங்க! நாந்தான் முதல்லயே சொன்னேனே- அரசியல், சினிமா, இதெல்லாம் எழுதி என் நேரத்தை, உங்க நேரத்தை வீணடிக்க மாட்டேன்னு! ஆனா- இந்த பம்பரம் நல்லதத் தானே சொல்லுது? சுலபமா புரியுதுன்னு சொன்னதுக்கு நன்றி.
அழகான, ஆழமான வரிகள். அஃறிணையாய் இருந்தாலும், மேலுயர்திணையாய் மாறியது உங்கள் பார்வையில்.
பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிந்திந்தேன், பின்னூட்டத்தை பதித்தேன்.
Post a Comment