09 April 2006

நட்சத்திர வந்தனம்..! <|>

மங்களம் குலுங்கி என்றும் அன்பு மேவி இன்பமாக
வான்வளம் பெருகி வாழ்க பூமியெல்லாம்
சங்கடங்கள் இன்றி சண்டை சச்சரவும் இன்றி வாழ்க
சஞ்சலங்கள் இன்றி வாழ்க தேசமெல்லாம்!....

எனத் தொடங்கும் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் வரிகளைக் கூறி எனது நட்சத்திர வாரத்தினை நிறைவு செய்கிறேன்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்தந்த நாட்களில் பதிவுகள் (குறைந்தது ஒன்றேனும் பதிய முயற்சி செய்தேன்) தர முயற்சித்தேன்.

பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சித்ரான்னம் வைத்தேனா, எனக்குத் தெரியாது!! ஆனால், வயிற்றை , மனதைக் கெடுக்காத பத்தியச் சாப்பாடாவது போட்டேன் என நினைக்கிறேன்.

விவாதங்கள் என்ற பெயரில் ப்ரச்னைகளை வளர்க்கவும் விரும்பவில்லை.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள ப்ரச்னைகள், என் சொந்தப் ப்ரச்னை இல்லை. கோவில்களும், நமது சரித்திரமும் அழிந்துபோகும் அபாயத்தை மிக சிறிய நாட்களுக்குள் பார்த்து, மனம் நொந்து, பல பெரிய மனிதர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். தெளிவாகத் தெரியும் 2 விஷயங்கள்:-

1) தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த பொருள், அரசியல் நெருக்கடிகளில் தான் பழங்கால புதை பொருட்கள், கோவில்களை ஆராய முற்படுகின்றனர். ஆள் பலமும் குறைவு.

2) ஊர் மக்களிடையே, நம்பிக்கையின்மை - ஆண்டவனிடத்தில், ஆட்சியாளர்கள் இடத்தில், ஏன் சக மனிதர்களிடத்தில், தன்னிடத்தில் - இல்லாமலிருப்பது!

முதல் ப்ரச்னையை சில ஆர்வலர்கள் சரிகட்ட முற்பட்டிருக்கிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களையும், கோவில் புனரமைப்புப் பணி செய்யும் சிலரையும், கோவில்களை சுத்தம் செய்யும் தன்னார்வக் குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழு அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் ப்ரச்னையை எல்லாரும் சேர்ந்துதான் சரி செய்ய வேண்டும். முதலில் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும், அரசு அலுவர்கலையும் குற்றம் கூறிக் கொண்டே இருக்கும் மனப் பாங்கை நாம் கைவிடவேண்டும்! எம்.ஜி.ஆர் அவர்கள் அழகாகச் சொன்னது போல், "நாடென்ன செய்தது நமக்கு?" என எண்ணாமல், "நாமென்ன செய்தோம் நாட்டுக்கு?" என சீறிய சிந்தனை செய்ய வேண்டும்.

நாடு என்றால் என்ன? நாமும் நம்மை சுற்றியுள்ளதுதான், நமது முதல் நாடு, நாட்டின் பாகம். அதை சுகாதாரமாக வைக்க, நாம் முதலில் குப்பைகளை எறிவது, ரோட்டோரத்தைப் பார்த்தால் காலைத் தூக்குவது, எச்சில் துப்புவது, சுற்றியுள்ள மற்ற மக்களை பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் புகை விடுவது போன்ற செயலை நிறுத்தினாலே போதும்.(பிடிப்பது எனும் சொல் எனக்கு தவறாகப் படுகிறது!!- அவர் விடுகிறார், சுற்றியுள்ளவர்தனே, பிடிக்கின்றனர்?? Passive smokers) .

சிறுபிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தருதல், நடந்து போகும் தூரம் உள்ள வரலாற்றுசின்னங்களை பார்க்கக் கூட்டிச் செல்லுதல், தூய தமிழில் நல்ல குறள், பாசுரங்கள், சொல்லிக்குடுத்து அவர்களை தினமும் குளித்து உடை உடுத்தி சொல்லவைத்தல், இதெல்லாமே நல்ல சந்ததியை நாட்டுக்குத் தரும். மக்கள் தான் நாடு.

நான் முந்திய கட்டுரையில் குறிப்பிட்ட ராமமூர்த்தி அவர்கள், கோவில்களை சீரமைக்கப் போகுமிடமெல்லாம், அவருக்கு பல குறுக்கீடுகள். கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர்களின் கோபம், மற்றொரு மதத்தினர் இவர் இந்துயிஸம் பேச வருகிறார் என்று மத முத்திரை குத்தினாலும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று; எல்லா மதத்தினரும், சாதியினரும், ஒரே மண்ணின் மைந்தர்களே! அவர்கள் அனைவரும், அதை ஒரு பழைய கோவிலாக எண்ணாமல், "நம் மண்ணின் ஒரு வரலாற்று சின்னம், மக்கள், மன்னர் அமைதி தேடி வந்த இடம்", என்றெல்லாம் எண்ணிப்பார்த்து, அதை சீரமைக்க பொருளுதவி, செயலுதவி செய்து நிமிரவைத்தால் தான், அவ்வூர் சிறக்கும்! எல்லார் மனதிலும் உள்ள அழுக்குகள் போயி, சமத்துவம் மலரும்" என்கிறார். அவர் 20 ஆண்டுகளில், ஏறத்தாழ 100 கோவில்கள் சீரமைத்துக் கொடுத்திருப்பார்!!

குறைகளைக் கூவிப்பேசி, கூட்டம் சேர்ப்பதைவிட, களைகளைக் களைய என்ன செய்ய வெண்டும் எனும் சிந்திக்கும் நற்கூட்டம் வலுப்பெற வேண்டும்!! அதனை செயல் படுத்தக் காரியத்தில் உறுதி வேண்டும்!! அதற்கு என்னாலான எழுத்துப் பணியை நான் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தமிழும் தமிழ் சார்ந்த குலமும் மணக்க எழுதிக்கொண்டே இருப்பேன். நிறை, குறை இரண்டும் கூறி என்னை எழுதவைத்த உள்ளங்களுக்கு வணக்கம்!

9 comments:

துளசி கோபால் said...

மரபூராரே,

நல்ல அருமையான வாரமாகத்தான் இருந்தது. இன்னும் ஒரு பாதி நாள் இருக்கே.
அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க!

நல்லா இருங்க.

குமரன் (Kumaran) said...

உங்கள் இந்த வாரப் பதிவுகள் சிலவற்றைப் படித்துப் பின்னூட்டம் இட்டேன். சிலவற்றைப் படிப்பதற்காக பிரதி எடுத்து வைத்துள்ளேன். சீக்கிரம் படித்துப் பார்த்துப் பின்னூட்டம் இடுகிறேன்.

இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.

http://abtdreamindia2020.blogspot.com/

ஜெய. சந்திரசேகரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெய. சந்திரசேகரன் said...

துளசி கோபால்,
நான் முன்னே சொன்னது போல் வேறு ஊருக்கு பணியின் காரணமாக போகவேண்டியிருந்து. நேரமின்மைக்கு நடுவிலும், பல பதிவுகள் கடைசி இரண்டு நாட்களில் பதித்தேன். கடைசியாக இந்த வந்தனத்தை பதிவு செய்கையில், ஞாயிறு இரவு 10 மணி. நேர்காணல் எல்லாம் முடித்து, முடிவுகளை எந்து அமெரிக்க தலைவரிடம் chatல் அறிவித்துவிட்டு, அவசர அவசரமாக browsing centre க்கு ஓடி, பதிந்தேன். முரசு உதவியுடன் தொடை கணினியில் எல்லாவற்றையும் எழுதி, Word document ஆக வட்டையில் சேமித்து, Browsing centre ல் சுரதா உதவியுடன், உனிகோடில் மாற்றி பதிந்தேன். இந்திய நேரம் திங்கள் காலை 10.30 வரை நட்சத்திரமாக இருந்தேன் இருந்தாலும், சென்னைக்கு திருமிவந்துகொண்டிருந்த காரணத்தால், மேலும்பதிய முடியவில்லை. முன்னாலேயே முடித்ததற்கு மன்னியுங்கள். எனினும், நட்சத்திரத்தைக் கழற்றிவிட்டாலும், பதிவுகளுக்கு நீங்கள் சுவையாக பதில் போடாமலா இருக்கப் போகிறீர்கள் :-) நிறையப் பதிவேன். ஆசிகளுக்கு நன்றி

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க, குமரன், மதுரக்காரரே,
எல்லாத்தையும் படிச்சி பதில் போரறேன்னு சொன்னதுக்கு நன்றி,
இந்த பதிவில் சொன்னதை ஆமோதித்ததுக்கு டபுள் நன்றி :-)

கீதா சாம்பசிவம் said...

very useful matters. Really you are doing a wonderful job. I have not opened e-kalappai due to my health. i cut my finger so i could not able to type properly.hope you get the necessary information about suddananda barathi from the specified person.i am wondering how you are able to manage the time adjustment..between your job you are doing so much social work also.congratulations.

ஜெய. சந்திரசேகரன் said...

கீதா சாம்பசிவம்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என்ன நீங்க வர வர பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க? நான் பொதுஜன சேவை, ஆபீள் வேலை ரெண்டும் எங்க செய்றேன்? (எது செய்யலைங்கறது நீங்களா கண்டுபிடிச்சுக்குங்க! ஹி, ஹி.) கை சரியாகி சீக்கரமா, கரண்டி,கலப்பை ரெண்டையும் பிடிக்க வாங்க. நேரமின்மையால் (நீங்க கண்ணு வெச்சுட்டீங்க போங்க!!!) சுத்தானந்தரை பற்றி தகவல் சேர்க்கமுடியவில்லை. பின்னர் அவரை அணுகுகிறேன். உங்கள் தகவலுக்கு நன்றி. உங்கள் தூண்டுதலால் "கோயிலை யார் சீரமைக்கவேண்டும்" எனும் பதிவை போட்டுள்ளேன். படித்தீர்களா?

srishiv said...

அருமையான மற்றும் உபயோகமான உருபடியான சில பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று திரு.சந்திரசேகரன் அவர்களே, இதனை என் புக்மார்க் ல் பதிந்துவிட்டேன், அடிக்கடி பார்ப்பேன், கோவில்கள் பற்றி விளக்கமாக கூறியமைக்கும், அந்த மனிதநேயத்தினை விளக்கியதற்கும், முக்கியமாக குழந்தைகளை அருகிலுள்ள சென்றுபார்க்கும் தூரத்தில் இருக்கும் வரலாற்றுத்தலங்களுக்கு அழைத்துச்சென்று வரவேண்டும் என்ற கூற்று மிகப்பிடித்திருந்தது, வாழ்த்துக்கள்,
என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...

ஜெய. சந்திரசேகரன் said...

ஸ்ரீ ஷிவ்
உங்களைப்போன்றவர்களின் ஊக்கத்தினால் தான், இன்னும் எத்தனை கோயில்களை எதிர்கொண்டாலும் எடுத்து திருப்பணி செய்யவேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. நன்றி. பழக்க தோஷம் கேட்கிறேன் - நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்? திருப்பணிக்கு கை கொடுங்களேன்? (join temple_cleaners yahoo group. Visit http://templesrevival.blogspot.com)