வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
07 April 2006
வி.வ.போ- 1 விளக்கெண்ணை!
இனி எவனையும் 'போடா விளக்கெண்ணை' ன்னு திட்டாதீங்க! பய சந்தோஷப் படுவான். பாட்டி வைத்தியத்துல பல உபயோகம் எல்லாருஞ்சொல்லி கேட்டுருப்பீங்க.
இப்ப ஆஹா, 'பத்திகிச்சு, பத்திகிச்சு...'ன்னு பத்திக்கிற மேட்டரு, 'ஜாத்ரோபா'ன்னு சொல்ற காட்டாமணக்குச் செடிதான்!! பயோடீசல்னு தாவரங்கள்லேர்ந்து எண்ணை எடுக்கற ப்ராஜக்ட்தான் இப்ப எல்லார் வாயிலயும்! எண்ண பத்திகிச்சுன்னா எப்படிய்யான்னு வெளாட்டுத்தனமா கேக்காம, இந்த விஷயம் ஏன் பத்திகிட்டு எரியுதுன்னு பாருங்க!
அரசாங்கமே, இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் மூலமா, இந்தச் செடிலேர்ந்து வர எண்ணைய 15 ரூபாய்க்கு வாங்கி, பதப் படுத்தி டீசலோட கலந்து விக்கலாம்னு சொல்லீருக்கு. பதப்படுத்தப்பட்ட எண்ணைய நாமளே சப்ளை பண்ணா, 25 ரூபாய் வரைக்கும் கூடக் கிடைக்கும்!
பயிரிடறதுக்கு தரிசு நிலம் இருந்தாலும் பரவாயில்லை; எப்படி, என்ன மாதிரி விதை கிடைக்கும், என்ன தூரத்துக்கு ஒரு விதை போடணும்னு எல்லாம் சொல்லித்தர ஆயிரம் கம்பெனிங்க ஊரெல்லாம் முளைச்சிடுச்சு! தனியாரான் ரிலயன்ஸ் எண்ணைக் கம்பனியே, ஜாம் நகர்ங்கிற இடத்துல லட்சக்கணக்கான் மரத்தை நட்டு வளர்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்க!
சுமார் ஒரு ஏக்கர் விளைச்சலுக்கு, 650 லிட்டர் எண்ணை கிடைக்கும்னு சொல்றாங்க! நம்ம தஞ்சாவூர் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்து இடத்துல ரெயில்வே கூட இந்த ஆமணக்குச் செடிய வளர்க்குது; ரயில் இஞ்சினுக்கு உபயோகப்படும்ல? ஆனா, விவசாயிங்க, இதப் பயிரிட சொல்லித்தர ஆளு யாரு, ஏஜன்சியாருன்னு தீர விசாரிச்சுட்டு எறங்குனா, நல்ல மகசூல பார்த்துடலாம்!! பதப்படுத்தற வேலைய நானே செய்றேன்னு கிளம்பினா, அதுக்குண்டான 'காலம்' (நேரத்தச் சொல்லல - distillation column) கருவிங்க எல்லாம் ஏற்பாடு பண்ண குறஞ்சது ஒரு 5-6 லட்சம் செலவாகும். ஆனா, விளச்சல விலை போட்டு வாங்க, பல நிறுவனங்கள் தயாரா இருக்கு!
சரி, இவ்வளவு சுலபமா, இதுக்கு ஏதும் போட்டி வந்துருச்சுன்னா?
இருக்கு!! மெக் டொனால்டு கம்பெனிக்காரங்க, அவங்க ஹோட்டல்ல பண்டங்கள் தயார் செஞ்சப்புறம் வீணாகுற சுட்ட எண்ணைய பதப்படுத்தி, வண்டியோட்ட உபயோகப்படுத்தறதா தகவல்! அம்மாமாருங்க அப்பளம் சுட்ட எண்ணைய திருப்பி திருப்பி உபயோகிச்சு அப்பளம் நார்றதவிட (அது உடல் நலத்துக்கும் கேடு!) பேசாம சுய வேலைத்திட்டத்துல இந்த எண்ணைய எல்லாம் ஒண்ணு சேர்த்து, பதப் படுத்தற வேலைல இறங்கலாம்!! இதுக்கும் நல்ல ஆலோசகர் தேவை! சும்மா இறங்கிட்டு, அப்புறம் எண்ணைல கைய விட்டுட்டு, 'கை சுட்டுறுச்சு' ன்னு சொல்லாதீங்க!
இதுக்கும் அப்பன் டெக்னாலஜி, வேற ஒண்ணு தம்மாதூண்டு சைசுல களமிறங்கியிருக்கு! Microalgae ன்னு சொல்ற நுண்ணுயிர் பாசிங்க! தரிசு நிலம், கூவம் மாதிரி தண்ணி, சாக்கடை இதுலகூட இந்த பாசிங்க, வளருது; தாவர எண்ணையத் தருது!கரிமல வாயு தயாரிக்குது! இத ரெண்டையும் வெச்சு, ஆராய்ச்சி பண்ணி, 'வெளக்கெண்ண வெளக்கெண்ண தாண்டா, இந்தப் பாசிலேர்ந்து தயாரிக்கிற எண்ணை, எல்லா எரிபொருளுக்கும் அல்வாகொடுக்குற அயிட்டம்' னு கூக்குரல் இடுறாங்க, இந்த பாசி ஆராய்ச்சியாளர்கள்! காரணம்?
காட்டாமணக்கு ஒரு ஏக்கருக்கு 650 லிட்டர் கொடுத்தா இந்த பாசிய வளர்த்தா,ஒரு ஏக்கர் பரப்புக்கு, 75,000 லிட்டர் எண்ணை தரும்னு சொல்றாங்க!! அம்மாடியோவ்! எதோ ஒண்ணு! பூமிக்கடிலேர்ந்து எண்ணை இருக்குற வரைக்கும் தான் எடுக்க முடியும்! அப்புறம் அமெரிக்கா எண்ணை வளநாடாப் பார்த்துப் பார்த்து குண்டு போட்டு, ஆக்கரமிப்பு பண்ணாக் கூட, எண்ணை வராது, மண்ணுதான் வரும்!
அதனால, மேலே சொன்ன மாதிரியோ, இல்ல, 'போடா காட்டான்' னோ யாரையும் திட்டாதீங்க! நாளக்கி உங்க பேராண்டி வண்டில ஸ்கூலுக்கோ, காலேஜுக்கோ போணும்னா, அந்த காட்டுல இருந்துதான், மரம், பாசிகள்லேர்ந்து தான், எரிபொருள் கிடைக்கும்!! :-)!!
சரி, யாரும் தலைப்பு என்னன்னு கொழப்பிக்கக் கூடாதுன்னு மொதல்லயே சொல்லீடறேன். பெரிய தலைப்பா போட்டா, blogger - blocker ஆயிடுது!! பதிவு சேமிக்க முடியாம போகுது.
அதனாலதான் இந்த சொல் சுருக்கம்!
விஞ்ஞானத்த வளர்க்க போறேண்டீ- அதான் வி.வ.போ !!
"விவகாரமான ஆளுதான் போ" ன்னு திட்ட மாட்டீங்கன்னு நம்பறேன்!!
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ஏங்க, இந்த கட்டுரைக்கும், விளக்கெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்?? ஏன் இந்த தலைப்பு?
(எவ்ளோ விளக்கம் எழுதினாலும் என்ன மாதிரி ஆளுக்கு புரிய மாட்டேங்குதுங்கோ.. )
அருமையான பயனுல்ல தகவல், உங்கள் சேவை தொடர வாழ்துக்கள். ஸ்ரீதர்
ஜாட்ரோபா என்னும் காட்டு ஆமணக்கு செடியில் இருந்து கிடைக்கும் எண்ணையைத் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆமணக்கு எண்ணெய் விளக்கு எரிக்கப்பயன்பட்டது. இப்போது எஞ்சினில் எரிக்க. விளக்கெண்ணெயை இனிமே பொறியெண்ணெய் என்று அழைக்கலாம் போல.
பொன்ஸ்- ஆமணக்குகேர்ந்துதான் விளாக்கண்ணை தயார் பண்றாங்க! தலைப்புக்கு விளக்கம் அந்தப் பதிவின் கடைசியிலேயே தந்துருக்கேனே? அது, கலைவாணர் என்.எஸ்,கே வின் பிரபலமான பாட்டின் முதல் வரி. எனக்கு பிடிச்ச சீர்திருத்தவாதி! சிரிச்சுகிட்டே சீரியஸ் மேட்டர் பேசுனவர்!
ஓ.. ஆமணக்கு தான் காட்டாமணக்குச் செடியா.. ஓகே ஒகே.. இப்போ புரிஞ்சிடிச்சு.
நட்சத்திர வாரத்திற்கேற்ற நல்ல கட்டுரை.
எனது சித்தப்பா திரு. தியாகராஜன் (அசோகமித்திரன்) அவர்கள் கீழ்க்கண்ட நபர் பெயரையும் போன் நம்பரையும் கொடுத்து உள்ளார்.முயற்சி செய்யவும்.
திரு.சுபாஷ் சந்திர போஸ்
24343806 மற்றும் 24335588. என் சித்தப்பாவின் நம்பர் 22431698.தேவைப்பட்டால் அவரையும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவருக்கு யோகியாரைப் பற்றி அதிகம் தெரியாது என்று சொன்னார்.
ஆஹா பொன்ஸ் .."நட்சத்திரவாரத்திற்கேற்ற நல்ல கட்டுரை" என்னங்க அர்த்தம்? விளக்கெண்ணெய் மாதிரி எழுதியிருக்கேன்னு சொல்றீங்களா? மத்த பதிவுல இப்படியொரு வார்த்தை எழுதல? ஹ¤ம்,புரியலப்பா!
ஐயய்யோ.. நீங்க வேற.. பயனுள்ள கட்டுரைன்னு சொல்ல வந்தேங்க.. தப்பா எடுத்துக்காதீங்க..
இதுக்காக, ஒவ்வொரு பதிவிலேயும் நான் இதை எழுத முடியுமா? :)
ஆஹா பொன்ஸ் நல்ல ரெண்டு வார்த்தை சொன்னீங்களா, சரி; நம்புறேன். ஆமா, பரிட்சைக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி நாள் பூரா தமிழ்மணத்துல புகுந்தடிச்சேங்கன்னா எப்படி? அண்ணா, படிங்கண்ணா, பரிட்சைக்கு!! ஒருவேளை தமிழ் M.A பரீட்சையோ?
ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு அட்டிcடிஒன் மாதிரி ஆயிடுச்சு.. நான் இப்போ வீட்ல இருந்து, பாக்கறேன்.. எங்க கணினில தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது.. அப்படியும் விடாம, ஜffன லிப்ரர்ய் எழுத்துரு மாற்றி எல்லாம் உபயோகிச்சு படிக்கறேன்.. தப்புத் தான்.. என்ன செய்யறது.. எழுந்து போகமுடியலை.. சரி.. இவ்ளோ தூரம், நட்சத்திரமே சொல்றதுனால, இன்னிக்கு கடையை மூடிடறேன்.. :)
ப்புறம், அண்ணான்னு சொல்லாதீங்க.. நான் தங்கச்சியாக்கும்..
ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு addiction மாதிரி ஆயிடுச்சு.. நான் இப்போ வீட்ல இருந்து, பாக்கறேன்.. எங்க கணினில தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது.. அப்படியும் விடாம, jaffna library எழுத்துரு மாற்றி எல்லாம் உபயோகிச்சு படிக்கறேன்.. தப்புத் தான்.. என்ன செய்யறது.. எழுந்து போகமுடியலை.. சரி.. இவ்ளோ தூரம், நட்சத்திரமே சொல்றதுனால, இன்னிக்கு கடையை மூடிடறேன்.. :)
அப்புறம், அண்ணான்னு சொல்லாதீங்க.. நான் தங்கச்சியாக்கும்..
மன்னிச்சுக்க தங்கச்சி; நல்லாப்படி (தமிழ்மணத்தையும் சேர்த்துதான் சொல்றேன்; :-))
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.
விளக்கெண்ணெய் நெய்யா வடியப்போகுது இனிமே!
நல்ல பயனுள்ள கட்டுரை.
ஏம்மா பொன்ஸ், வூட்டுலே கணினியிலே கலப்பை போட்டுரும்மா.
அப்புறம் என்னப்போலவே கலக்கலாம்:-)))
துளசியக்கா சொல்லிட்டாங்க, வாய் முகூர்த்தம் வெளக்கண்ணெய் நெய்யா கொட்றது, நம்ம விவசாயிங்க, வயத்துல சோறா கொட்டட்டும்.
பொன்ஸ் பொண்ணே, அக்கா டீச்சராக்கும்,சொன்னத செஞ்சா உங்களுக்கு நேர மிச்சம்.
அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி,
பெருவிஜயன்,
நீங்க சொல்ற பேரு வெச்சு ஆமணக்கு செடிய மக்கள் கூப்டாலும் கூப்பிடலாம், கேளிவிப்படறப்ப சொல்லுங்க,
நன்மணம்,
லேட்டா பதில் சொன்னதுக்கு மன்னியுங்க; என்ன பண்றது? பொழப்புன்னு ஒண்ணு இருக்கே? சனி, ஞாயிறுன்னு பார்த்து என்னயப் போய், வேற ஊருக்குப் பறந்து போய், புது ஆளுங்க எடுக்க நேர்காணல் செய்ய சொல்லிட்டாங்க! என்ன பண்றது. ராத்திரி, பா.மு., பா.பி. வேறொண்ணுமில்லீங்க, (பாத்ரூம் போகுமுன், பாத்ரூம் போனபின்) வந்து, தொடை கணின்¢ய (மடி கணினி கூட சரிதானோ?) வெச்சுகிட்டு, எழுதவேண்டியது. இப்படி அவஸ்த பட்டுகிட்டேதான், கடைசி 5 பதிவுகளை எழுதி முடிச்சேன்.
பொறி எண்ணெய்ன்னா, எனக்கு பொரிக்கிற (அப்பளம், வடை) எண்ணெய் தான் ஞாபகம் வருது. என்ன பண்றாது, நம்ம ஞானம் அவ்வளவுதான்.
அன்புடன் ஜெய சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் பக்கங்களைப் படித்தேன். அருமையான தகவல்கள் நன்றி. விளக்கெண்ணெய் பற்றிய தகவல் அருமை. விளக்கெண்ணெய் மற்றும் பாசி பற்றி மேலும் அறிய ஆவல். ஒரே ஒரு குழப்பம் ஆமணக்கு என்பது எண்ணெய் எடுப்பது, காட்டாமணக்கு என்பது வேலிக்காக நட்டுவைப்பது. காலையில் குச்சியை ஒடித்துப் பல்துலக்குவார்கள். நானும் துலக்கியிருக்கிறேன்.
முனைவர் இறையரசன் (ரொம்ப நாள் கழிச்சு நல்ல தமிழ் பெயரைப் படிக்கிறேன்!),
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. ஆமணக்கு காட்டாமணக்கு எல்லாமே தாவரவியல் படி ஒரே ஜாதி, ரகத்தில் தான் வேறு, வேறு -(இதுலயும் ஜாதியான்னு கோவிக்காதீங்க!) சும்மா கல்வியாளர்கள் வகதரவா பிரிச்சு படிக்க உபயோகமாக இருக்கத்தான். இந்த ஜாத்ரோபா கர்காஸ் எனும் வகைதான் எண்ணெய் எடுக்க உதவும் வகை. பாசியைப்பற்றி, ஒரிரு நாளில் தனி பதிவு போடுகிறேன்.
பலவகை பற்றி பார்க்க http://en.wikipedia.org/wiki/Jatropha
Post a Comment