04 April 2006

நேர்முகத் தேர்வு!

பொன்ஸ் இதே தலைப்புல ஒரு கதை எழுதினதால தலைப்பை மட்டும் மாத்தினேன். தமிழ்ல!

எதிர்பார்க்கவில்லை யாரும்! இண்டெர்வியூவுக்கு இத்தனை பேர் சராசரி 100 பேர்! மிகவும் முக்கியமான பதவி! லையாசன் மானேஜர். 

பேப்பர் விளம்பரமே முழுப்பக்கத்துக்கு வந்திருந்தது! பொறியியல் மற்றும் எம்.பி.ஏ தகுதியுள்ள சுறுசுறுப்பான இளைஞர் தேவை! 
குறைந்தது 5 வருட அனுபம் தேவை. 
நேர்முகத்தில் தேர்வானால், பல நாடுகளுக்குப் போய், மிகவும் பரபரப்பாக வியாபாரம் செய்யப்படும் மென்பொருளின் (Software) வெளிநாட்டு டீலர்கள், ஏஜண்டுகள் நிர்ணயித்து, அவர்களது ப்ரச்னைகளை சமாளித்து, நல்ல முறையில் ஏற்றுமதி ஆக்கவேண்டிய பொறுப்பு! 

அதனால் ரிஷப்ஷனில் நிற்க இடமில்லை! 
எதோ Job Fair போல! சீரியசான முகத்திடன், பரபரப்பான முகத்துடன், களையான முகத்துடன், ஆண்களும், மெதுவாக மொபைலில் பேசியபடி பல பெண்கள், இப்படி பல பேர்..

 'ஹை டா, யூ டூ, வேணாண்டா, உனெக்கெல்லாம் I.I.T., I.I.Sc. இதெல்லாம் தெரந்துவெச்சுருக்கான் பாஸ்,எதுக்கு இந்த வேலைக்கெல்லாம் வர?''இல்லடா, அப்பா வேலக்கிப் போ, சிஸ்டர் மேரேஜுக்கு உதவியா இருக்கும்ங்கிறாரு!'
`நா வெணா உதவி பண்றேன்; ஐ வில் மாரி ஹேர் விதவுட் டவுரி!'
`ஹோ' சுற்றிலும் சிரிப்பலை! 
 'மாம்ஸ்!ஐ ஹாவ் எக்ஸ்பீரியன்ஸ், பட் ஸாப்ட்வேர் சேல்ஸ் இல்ல, வேர பேக்கேஜ்; என்ன கேள்வி கேப்பாங்க? 
தெரியல'
'எதுக்குடா புலம்பற? வர்றது வரட்டும்!' - (மச்சான்!?) 
 `யேய், ராஜி, என்னடி, கல்யாணம் செஞ்சுக்கப் போறன்னாங்க! நீ எப்படி இந்த இண்டர்வியூவுக்கு?'
'போடி, நல்லா ஊர் சுத்தலாம்; எவனாவது இளிச்சவாயன் அப்புறமா மாட்டமாட்டானா? அப்ப பார்த்துக்கலாம்' 

இப்படி பல குரல்களை அடக்கியது - ஒருவனின் வருகை! 
 இதுதாண்டா ஹேண்ட்சம்! - எனும்படி, உயரமாக, நல்ல நிறம், தீர்க்கமான பார்வை, உயரிய உடை,பாவனை- இத்யாதிகளுடன்! மெலிதான தங்க பிரேம் அணிந்த கண்ணாடி, கையில் சிறிய லேப்டாப் பை! தலை முதல் கால் வரை பணம் தெரிந்தது. ரிசப்ஷனிஸ்டிடம் அவன் பேசிய நுனிநாக்கு ஆங்கிலம் மற்ற எல்லார் வயிற்றிலும் புளியைக் கறைத்தது! மெதுவாக இருக்கையில் அமர்ந்தான். மற்றவர்கள் அவனையே பார்ப்பதும், தங்களுக்குள் பேசுவதுமாய் இருந்த அவன், அதனை சட்டை செய்வதாகத் தெரியவில்லை!

9.00 மணிக்கு அழைத்தவர்கள் மேற்கொண்டு என்ன செய்வார்கள், யாரை முதலில் அழைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை!மெதுவாக ஒருவித சலிப்புப் பேச்சும், `சும்மா, ஏமாத்துறாங்கடா' என்ற எதிர்மறை ஏச்சுகளும் வர ஆரம்பித்தன!Mr.Handsome - அவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் மெல்லிய குரலில் மொபைலில் யாருடனோ ரொம்ப நேரமாக பேசிக்கொண்டிருந்தான்!!

மணி 11.00! மெல்ல ஒருவர் M.D. ரூமிலிருந்து எட்டிப் பார்த்தார். 
கையில் ஒரு குறியேடு. ஒரு சில பேர்களை உரக்கப் படித்தார்; ``எல்லாரும் கான்·fபரன்ஸ் ஹாலில் வெயிட் பண்ணுங்க". (Mr.Handsome மும் அதில் ஒருவன்). மற்றவர்கள் போகலாம்! என்றார்!! 

பல பேருக்கு ஒரே ஷாக்! ஏன், எதற்கு என்றுகூட தெரியாமல் திருப்பி அனுப்பினால்?? 
திடீரென ஒரு குரல். `யோவ் என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு! இருக்குற கம்பெனில லீவ் போட்டு, இங்க வந்து காஞ்சுக் கிடந்தா இப்படி விரட்டியடிக்கிறீங்க?? 
யோவ், யாருய்யா H.R.D மானேஜர்? கூப்பிடுய்யா!! 
ஏ எதுக்கு மாம்ஸ்?? M.D.யக் கூப்பிடுடா..

 `ஆமாம், ஆமாம், வீ வாண்ட் தி M.D. டு ஆன்ஸர் அஸ்!" 

கோஷங்கள் அதிகமாயின! 

 Mr.Handsome முன் வந்தான். "லுக் மை டியர் ஜெண்டில்மென். நானும் உங்களைப் போல் தலைகால் புரியாமல்தான் இருக்கிறேன்; பட், சர்ப்ரைஸ் இஸ் என்னையும் உள்ளே அழைத்துள்ளார்கள்!! உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், உங்களுக்காக நான் ஒரு கோரிக்கை இந்த கம்பெனி நிர்வாகத்திற்கு வைக்கிறேன்! அதை வெளியில் வந்து 10 நிமிடத்தில் எல்லோருக்கும் சொல்கிறேன். ஆனால் நீங்களெல்லாம் சரி என்றால்; ஓகே?"

 "எஸ், எஸ் கோ அஹெட்'' என்றார்கள் 
எல்லோரும்.மற்றவர்கள் இந்த கூத்தைப் பார்க்காமல் எப்பொழுதோ உள்ளே போய்விட Handsome முடன் மற்றொரு இளைஞனும் நின்று கொண்டிருந்தான். " ஹே, ஐ ஆம் ராகவ் ; வாட் இஸ் யுவர் நேம்? வை ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர்?" - இது Handsome.( அப்பாடா ஒரு வழியா பேர் தெரிஞ்சது!!) 

இளைஞன் - " ஐ ஆம் ராகேஷ் ஜெயராம். என் பெயர் உள்ளே அழைக்கப் பட்டுவிட்டது. இருந்தாலும் இவர்களை இப்படியே விட்டுவிட மனதில்லை. அதான்..ஐ வாண்ட் டு ஹெல்ப் யூ டாகிங் fபார் தெம்." 
 "குட். சரி இருவருமாக உள்ளே போய் பேசுவோம்!" ராகவும், ராகேஷ¤ம் உள்ளே போனார்கள். எண்ணி பத்து நிமிடத்தில் ராகேஷ் வெளியில் வந்தான்.

" ஹி, நண்பர்களே, நல்ல செய்தி! 1/2 மணி நேரம் கழித்து எல்லாரையும் உள்ளே அழைக்க M.D. சம்மதித்துள்ளார்! 
யாருக்கு காத்திருப்பதால் பிரச்னை இல்லையோ, அவர்கள் நிற்கலாம். மற்றவர்களை யாரும் இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கவில்லை!" 

சுமார் 10 பேர் இருக்க, மற்றவர்கள் அவசரமாக வெளியேறினர். 

1/2 மணி நேரம் கழித்து, முதலில் சென்ற எல்லோரும் வெளியே வந்தனர். வந்ததும் பேசாமல், வாசலை நோக்கிப் போய்விட்டனர்! காத்திருந்தவர்கள் உள்ளே அழைக்கப் பட்டனர். மாநாட்டு மேஜை, அதன் மேல் ப்ரொஜக்டர், கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட நவீனங்கள். அவரவர் நாற்காலிகளில் அமர்த்தப் பட்டனர். 2 நிமிடத்திற்குக் கூட எல்லாருக்கும் பொறுமையில்லை! மெதுவாக முணுமுணுக்கத்தொடங்கினர்! 

சட்டென எல்லாரையும் வாயடைக்கச் செய்த அந்த மைக் ஓசை மட்டும் ஒலித்தது." நண்பர்களே, வணக்கம். நான் இந்த கம்பெனியின் M.D. பேசுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கும், நேரில் வந்தமைக்கும் நன்றி. எல்லா மென்பொருள் நிறுவனமும் வழக்கமாக பரிட்சை, பின்னர் நேர்முகம் எனத்தேர்வு செய்யும். நானும் அடைத்தான் இதுவரை செய்தேன்!

உங்களுக்கு நான் சொல்வது ஆச்சிரியமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். ஆனால், வரும் கூட்டத்தை எதிர்பார்த்ததனால் தான், நான் இப்படி ஒரு தேர்வு செய்தேன்!" தேர்வா? எங்க வெச்சீங்க?" என்றது ஒரு தைரியக் குரல்! 

"யெஸ். நீங்கள் கம்பெனிக்குள் கால் வைத்த நிமிடமே, தேர்வு ஆரம்பமாகிவிட்டது! எனது, செக்யூரிடியிலிருந்து, ரிசப்ஷனிஸ்ட், பியூன் ஆகியோரே தேர்வாளர்கள்! எப்படி, ஒருவர் உள்ளே வருகிறார், வரும் சற்று முன் தான் தலை சரிசெய்துகொள்கிறாரா, இல்லை இயற்கையாகவே, சுத்தமானவரா, காலணிகள் எவை? ஷ¥ அணிந்துள்ளாரா? 
விளையாட்டு ஷ¥வா, இல்லை சரியாக பாலிஷ் செய்த ஆபிஸ் ஷ¥வா? காஷ¤வல் வேரா, இல்லை ஆபிஸ¤க்கு வரும் உத்தேசத்தில் நல்ல சுத்தமான உடை அணிந்துள்ளாரா? வந்ததும், என்ன செய்கிறார்? அரட்டையா, இல்லை ரிஷப்ஷன் மேசைமேலுள்ள இந்தக் கம்பெனி பற்றிய பல நாளேட்டுச் செய்திகள், கம்பெனி ப்ராஸ்பெக்டஸ், முதலியவற்றை படிக்கிறாரா?

வரவேற்பறையின் மூலையில் நாங்கள் வேண்டுமென்றே, `இலவச போன்' எனக் குறிப்பிட்டு ஒரு போன் நிறுவியிருந்தோம்! அதை எத்தனை பேர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், என்றெல்லாம் கண்காணித்து, காவலாளி முதல் பியூன் வரை, மதிப்பெண் இட்டு, எனக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்!! 

செக்யூரிட்டி கணேசன், பியூன் ராமு, ரிசப்ஷனிஸ்ட் ஆகியோருக்கோ, இதனால் ஒரு பெரிய பொறுப்பை தலையில் சுமக்கும் பெருமிதம்! எனவே, ஆட்களின் நடையுடை பாவனைகள், மற்றும் போன் செய்பவர்கள், சவடால் அடிப்பவர்கள், ஏன், பெண்களை கேலி பேசுபவர்கள் என்று சகல செய்திகளையும் திரம்பட சேகரித்து, எனக்கு மிக்க உருதுணையாக இருந்தார்கள். என் வேலையை சுலபமாகினார்கள். ய ஸ்பெஷல் தேங்க்ஸ் டு தெம்!" "தென் கேம் தெ க்ளைமாக்ஸ்! அப்படியும் 20 பேர் முதல்நிலை தேர்வில் தேறினார்கள். அவர்களுக்குத்தான், உள்ளே அழைக்கப்பட்டு நேர்முகக்காணல் நடைபெற்றது. 

ஆனால், அந்த நிலைக்கும் போவதற்கு முன்னாலேயே, என் கவனத்தைக் கவர்ந்தவர், திரு. ராகேஷ் ஜெயராம்! யெஸ், உங்களுக்காக வாதாட முன் வந்தவர்! தன் பெயர் வாசிக்கப் பட்டதும், எங்கே, மீண்டும் பெயர் வாசிக்கப் படாமல் போய்விடுமோ என்பதுபோல, மற்றவர்கள் உள்ளே அவசர அவசரமாக முண்டியடிக்க, இவர் மட்டும், ஒதுங்கி நின்றது ஏன் என் யோசித்தேன்! ஒருவேளை கூட்ட நெரிசலுக்கு பயந்தாரோ என்று கூட நினைத்தேன்! பட், ஹீ வாஸ் டிfபரன்ட்! மற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டுமென்று உள்ளேவந்து வாதிட்டார்! நான் கூட, " மிகவும் அதிகம் பேசினால், உன் தேர்வு கூட பின்னுக்குத் தள்ளப்படும்" என்று பயமுறுத்தினேன்! அசரவில்லை அவர்! பணிவாக, அதேசமயம் ஆணித்தரமாக, " உங்கள் பரிட்சை முறை புதுமையானதுதான், ஒத்துக்கொள்கிறேன்! ஆனால், பலருக்கு இதன் நிஜம் தெரியாது! ஏதோ, தில்லுமுல்லு என்றும், மேலிடத்து சிபாரிசு! என்றெல்லாம், தவறாக நம்மைபற்றி பேசுவார்கள்! எனவே, உள்ளே அழைத்து தன்னிலை விளக்கம் தர வேண்டியது நம் கடமை" என்று பேசினார்! 

நானும் விடாமல், " என்ன இது, நம் கம்பெனி என்று பேசுகிறாயே? இப்பொழுதுதான் தேர்வு செய்வதையே சொன்னேன், அதற்குள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாயே?" என்றேன்!அதற்கு, ராகேஷ், " சார், மன்னிக்கவும். எந்த நிமிடம் நாம் இந்த கம்பெனியின் ஒரு அங்கம் ஆகிறோமோ, எப்பொழுதும், கம்பெனியின் நல்லது கெட்டது, அதன் நற்பெயர் போன்றவற்றுக்கு நாமுமொரு கருவி ஆகிறோம். மனதில் தோன்றியதை, நல்லவையாக இருப்பின், உடனே சொல்வதுதான், கம்பெனிக்கு நல்லது!" என்றாரே பார்க்கலாம்! 

நாங்கள் தேர்வு செய்ய இருப்பவர், தினம் பிரச்னைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்! பல நாடு, பல மனிதர்கள்! எல்லாரையும் அனுசரித்து போகவேண்டும், அதே சமயம் கோபம் வரக்கூடாது! தெளிய சிந்தனை இருக்க வேண்டும். அதற்கு என் பரிட்சையில் ராகேஷ் தேறினார்! ஐ லைக்ட் ஹிஸ் ஸ்பிரிட்! ஸோ, தட்ஸ் இட்! இந்த தேர்வில் யாருக்கும் ஏமாற்றமிருந்தால், என்னை மன்னியுங்கள்! சரியான கோணத்தில் சிந்திப்பவர்க்கு, இந்த அனுபவம் ஒரு நல்ல தூண்டுகோலாகவும்,படிப்பினையாகவும் இருக்கும் என நம்புகிறேன்! குட் லக்!" நிசப்தம்! 

திடீரென ஒரு குரல்! "ராகேஷ் சரி! அந்த ராகவ்? அந்தாளும் தானே எங்களுக்காக பேசினான்?" 
"அவருக்கு இங்கு முன்னரே, வேலை தரப்பட்டுவிட்டது! யெஸ், ஐ ஆம் ராகவ், the M.D, myself!" திரைக்குப்பின்னால் இருந்து வெளியே வந்தார், ராகவ் பரத்வாஜ்,M.Tech. M.B.A(Harvard) - 28 வயது இளைஞர்!

25 comments:

சிவா said...

கதை கரு வித்தியாசமா, சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க. படித்து மகிழ்ந்தேன். நன்றி சந்திரசேகரன்.

Anonymous said...

நல்ல திருப்பம்.

Maraboor J Chandrasekaran said...

சிவா, நான் 'கதை' க்கறது, ரொம்ப கம்மி! என்னா, அதுக்கு நேரம் செலவு பண்ணி, நம்மளே ஒரு ரசிகனா படிச்சுப்பார்த்து, வேண்டாதத வெட்டி, ஒட்டி அனுப்பினா தான், கதை கதையா இருக்கும். உங்க விமரிசனத்துக்கு மிக்க நன்றி.

Maraboor J Chandrasekaran said...

பரணி, திருப்பங்கள் தானே கதை, வாழ்க்கை ரெண்டையும் சுவாரசியமாக்குகின்றன?

Anonymous said...

உங்களுடைய இண்டர்வ்யூ கதை சுவாரசியம்...ஆனால் முடிவை முன்னரே ஊகித்துவிட்டேனாக்கும்

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by a blog administrator.
Maraboor J Chandrasekaran said...

முத்து, நீ நெஜம்மாலுமே நீ புத்திசாலிப்பா!

Simulation said...

மரபூர். வாழ்த்துக்கள்.

கதை நன்றாக உள்ளது.

ஊடகங்களில் இடம் பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஞாபகம் வருகின்றது.

- சிமுலேஷன்

சிங். செயகுமார். said...

வித்தியாசமான திருப்பதில் கதை ஓட்டம் .பத்திரிகையாளர்ல சும்மாவா!

Maraboor J Chandrasekaran said...

உங்க கருத்துக்கு நன்றி, சிமுலேஷன். உங்க புனைப்பெயர் சூப்பர்! consultant consultant அவர்களே!

Maraboor J Chandrasekaran said...

சிங்.செயகுமார், நல்லா 'கதைச்சுருக்கே'ன்னு சொன்னதுக்கு நன்றி.

Unknown said...

கதை நன்றாக இருந்தது

Maraboor J Chandrasekaran said...

நன்றி,பாலா!

பொன்ஸ்~~Poorna said...

மரபூர்,
என் கதைக்காக நீங்க பேர் மாத்தினதுக்கு ரொம்ப நன்றி.. முதலில், நான் அந்தக் கதைக்கு "நேர்முகத் தேர்வு" என்று தான் பேர் வைத்திருந்தேன்.. அது அவ்வளவு வசதியாக வரவில்லை. அந்தக் கதையில் அடிக்கடி பேச்சுத்தமிழில் இன்டர்வியூ என்று வந்து கொண்டே இருந்தது.. அதையே தலைப்பாக்கி விடலாம் என்றால், தமிழ் தலைப்பு தான் வேண்டும் என்று ஒரு தயக்கம்.. அப்புறம், உங்கள் இன்டர்வியூ படித்தபின் தான் இந்த தலைப்பு போட வேண்டும் என்று முடிவு செய்தேன்..
உங்க கதைய படிச்சபோது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. முத்து சொன்னா மாதிரி, இப்படித்தான் இருக்கும்னு முன்னமேயே ஊகிச்சிட்டேன்... பின்னூட்டம் போடணும்னு தோணலை.. (அதிலும், உங்க பூ பதிவுக்கு பின்னூட்டம் போட்ட அதே மூட்ல இங்கயும் வந்தேனா, அதான் ,.. :-D) இனி ஒழுங்கா பின்னூட்டம் போடறேன்.. கதை பேரை மாத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ், மாத்தாமயே விட்டிருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு.. :)

Maraboor J Chandrasekaran said...

அட இதுதான் இருமனம் ஒத்த நட்பு! எப்படி பொன்ஸ் மாதிரியே யோசிச்சேன்? நல்ல வேளை, நம்ம கதைக் கரு வெர வேர? இல்லைன்னா, மண்டபத்துலயாராவது எழுதித் தராங்களான்னு நம்மள எல்லாரும் கிழிச்சுறுப்பாங்க! (தருமி சார்-மன்னிக்கவும்!) எதோ, என்னால முடிஞ்சது, உங்க நல்ல கதைக்கு இடஞ்சலா இருக்க வேணாமேன்னுதான்! :-)

குமரன் (Kumaran) said...

என்னங்க இது கதையோட தலைப்பை மாத்திட்டீங்க. படிக்கிறதுக்காக பிரதி எடுக்கிறப்ப வேற தலைப்பு இருந்தது. இப்ப பின்னூட்டம் போடலாம்னு வந்து பார்த்தா அதைக் காணோம். அப்புறம் அதே பொருள்ல இருக்கிற இந்தப் பதிவை வந்துப் பார்த்தேன். நல்ல வேளை. :-)

கதை நல்லா இருக்கு சார். பல முடிவுகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன் படிக்கும் போது. அதில் ஒன்றினைத் தான் நீங்கள் இங்கு தந்திருக்கிறீர்கள். அது சரி. அந்த மிஸ்டர். ஹேன்ட்ஸம் பெயரை எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கே? யாரது?

(இந்த வாரத்துல ஒரே ஒரு தடவையாவது 'அர்த்தம்'ன்னு சொல்ல வந்து பின்னால 'பொருள்'னு மாத்திச் சொல்லணும்ன்னு நினைச்சேன். சொல்லிட்டேன். :-) பார்க்க http://solorusol.blogspot.com/ )

Maraboor J Chandrasekaran said...

குமரன், பொறந்த வீட்டுச் சீரு இன்னும் வரலியேன்னு பார்த்துகிட்டிருந்தேன்! நல்ல வேளை லேட்டானாலும் வந்துருச்சு. மதுரைக்காரர்கிட்டயிருந்து. இதே தலைப்பில் பொன்ஸ் ஒரு கதை எழுதியிருந்தாங்க. அப்ப, அந்த வாரம், என் கழுத்தில நட்சத்திரம் வேற மாட்டீருந்தாங்களா, அப்புறம் அந்த பொண்ணுக்கு யாரும் படிக்கவாய்ப்பில்லாம போயிருமோன்னு, தலைப்ப மாத்திகிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேன்னா, மன்னிக்கவும். அந்த கதையும் நல்லா இருக்கு.

// கதை நல்லா இருக்கு சார். பல முடிவுகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன் படிக்கும் போது. அதில் ஒன்றினைத் தான் நீங்கள் இங்கு தந்திருக்கிறீர்கள்.//

பரவாயில்ல, நான் கூட அறிஞர்கள் சிந்திக்கிற மாதிரி சிந்திக்கிறேன்னு பெரும பட்டுக்கலாம்!

ஹேண்ட்சம்? நம்ம எல்லார்க்குள்ளயும் அப்படி ஒருத்தன் இருக்கான்! [நினைப்புதான் மனுசனுக்கு வினைம்பாங்க! :-)]

meenamuthu said...

கதை சஸ்பென்ஸா சுவாரஸ்யமா இருந்தது ஏதோ சினிமால பாக்கிறமாதிரி! :)

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by a blog administrator.
Maraboor J Chandrasekaran said...

மீனா, இப்பல்லாம் இவ்வளவு சஸ்பென்ஸா சினிமா எடுக்குறாங்களா என்ன? (இது கொஞ்சம் ஓவர்னு நீங்க கத்துறது காதுல கேக்குது! நம்ம எழுதறது நமக்கு நல்லாத்தானே இருக்கும்?

Karthikeyan Rajasekaran said...

கதை மிகவும் நன்றாக எடுத்து செல்லப்பட்டது.

ஓகை said...

சந்திரா

கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் இது எத்தனையாவது கதை?

நடராஜன்

ஓகை said...

சந்திரா

கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் இது எத்தனையாவது கதை?

நடராஜன்

Maraboor J Chandrasekaran said...

நன்றி. கார்த்திகேயன். மற்ற கதைகளையும் படித்து பின்னூட்டினால், எங்களுக்கு உற்சாக டானிக்காய் இருக்கும்!

Maraboor J Chandrasekaran said...

நன்றி நடராஜன். இரண்டாவதோ என்னமோ.பத்திரிகைகளில் வந்ததில்லை. ஆனால், மாணவ பத்திரிகையாளராக ஜுனியர், ஆனந்த விகடனில் ஓராண்டு பணியாற்றியுள்ளேன். அப்ப 'கதைச்சது' நிறைய :-)